♥24♥

4.9K 152 56
                                    


                 ஹேய் அர்ஜுன்... கிளம்பு டா.. சீக்கிரம்... நேரம் ஆச்சுல.... அத்தை கிளம்புங்க... எவ்ளோ நேரம் நான் வெய்ட் பண்றது... மனுசன நிலைமை புரியாம இவ்ளோ மெதுவாக கிளம்பிட்டு இருக்கேங்க... அகி எங்க?? கிளம்பிட்டாளா??? சத்யா.... சத்யா... சீக்கிரம் அவள கூட்டிட்டு வா.... இந்த வீட்ல என்ன தவிர யாருக்குமே பொருப்பே இல்ல.. என்றான் தலையில் அடித்தபடி...

                 அவ்வளவு நேரம் அவனின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் கொல்லென்று சிரித்தனர்....

                என்னவாம்???என்று அவர்களை பார்த்து திரும்பினவன்... அவர்களின் ரியாக்சனை பார்த்து அசடு வழிந்தான்...

                டேய்.. அடங்குடா... அலையாத... அகி உனக்கு தான்.... என்று அவனை பிடித்து சோபாவில் தள்ளினான் ராஜிவ்....

               அவனை பார்த்து ஹிஹிஹி என்று சிரித்தவன்... அப்போது தான் படியிறங்கி வந்த அகியை பார்த்து வாய் பிளந்தான்.... மறுபடியும் அங்கு சிரிப்பொலி பரவியது....

              ஆம்... கிருபா அகிக்கு இன்று திருமணம்..... அவள் ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு வந்து இரண்டு வாரம் ஆகியிருந்தது.... அந்த இரண்டு வாரத்தில்... கிருபா அர்ஜுனிடம் பேசியே அவனை கரைத்து இருவரையும் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டான்... இருவரும் சேர்ந்தே கிருபாவின் கம்பேனியை நடத்த ஆரம்பித்தனர்... கிருபா அர்ஜுனை பாட்னராக அறிமுகம் படுத்த முடிவெடுத்தபோது... அர்ஜுன் அதை மறுத்துவிட்டு வொர்க்கிங் பார்ட்டனராக சேர்ந்தான்....

                அடுத்து வந்த நல்ல நாள் இரண்டு வாரத்திலேயே வர... அன்றே திருமணம் என்று அத்தை முடிவுசெய்துவிட்டார்....

               ராஜிவ் மட்டும் சத்யாவை மட்டுமே அழைத்திருந்தனர்.... திருமணம் கோயிலில் சம்பிலாக நடக்க வேண்டும் என்று கிருபா கூறிவிட்டான்.....

              இதோ அவன் ஆவலுடன் எதிர்பார்த்து அந்த நாளும் வந்துவிட்டது... விடிந்ததில் இருந்து அனைவரையும் போட்டு பாடாபடுத்திக் கொண்டிருக்கிறான்... வீடே அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது...

அகல்யாWhere stories live. Discover now