என்ன குட்டி?? பேசனும்னு சொல்லிட்டு ஏதோ யோசனையிலேயே
இருக்க???
அனைவரையும் முக்கியமான விஷயம் பேச வேண்டும்.. என்று கூறி தன் ரூமிற்கு வர சொல்லியிருந்தாள்... ஆனால் வந்ததில் இருந்து எதும் பேசாமல் எதோ யோசைனையில் இருந்த அகியை அர்ஜுனின் குரல் களைத்தது....ம்ம் அண்ணா.... இங்க என் பக்கத்துல வாயேன்....
என்னடா?? என்றபடி எதிர் சோபாவில் அமர்ந்திருந்தவன் அகியின் அருகில் வந்தமர்ந்தான்....
அவனை தெருங்கி அமர்ந்து அவனின் கைகளை பிடித்துக் கொண்டவள்... அண்ணா... கிருபாவுக்கும் எனக்கும் இன்னொருக்க கல்யாணம் நடக்கனும்னு நான் ஆசை படுறேன்...
அவ்வளவு நேரம் அகியையே நெற்றி சுருங்க பார்த்துக் கொண்டிருந்த கிருபாவின் மனம் அதைக் கேட்டதும் குத்தாட்டம் போட்டது....
ம்ம் சரி டா பண்ணிரலாம்... கிராண்டாவே பண்ணிரலாம்.... கிருபா நி என்ன நினைக்குற??
ம்ம் எனக்கு டபில் ஓகே டா...
ம்ம் ஆனா கிருபா.. நீங்க கிருபாவா என் கழுத்துல தாலி கட்ட கூடாது கிஷோரா தான் கட்டணும்.. என்றவளின் பேச்சை கேட்டவன் திகைத்து சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்....
ஏன் டா குட்டி?? அவன் தான் கிருபா தன?? அப்புறம் என்ன??
இல்லண்ணா... நமக்கு மட்டும் தான் அவர் கிருபா... ஆனா மாமா சாகுற வரைக்கும் யார்ட்டயும் அத சொல்லல... அவர் இவருக்கு குடுத்த பெயர் கிஷோர்.. சோ நம்மளும் சொல்ல வேண்டாம்... நான் கல்யாணம் வேணும்னு கேக்குறதுக்கு கூட இது தான் காரணம்... எல்லாருக்கும் கிஷோர் வெட்ஸ் அகல்யா னு தான் தெரியணும்.... கிஷோர் நமக்கு மட்டும் தான் கிருபா.. நான் சொல்றது உங்க எல்லாருக்கும் புரியுதா???
ம்ம்... தன் சம்மதத்தை தன் அணைப்பில் உணர்த்தினான் அர்ஜுன்...
அகி திரும்பி கிருபாவை பார்க்க அவன் இவளை பார்க்காமல் எழுந்து சென்றான்.. அதனை கண்டவள் திகைத்து தன் அண்ணனை பார்க்க அவன் கண்களை மூடி திறந்து எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி தலையை தடவிவிட்டு எழுந்து சென்றான்....