♥57♥

4.7K 131 30
                                    


                       நாட்கள் எப்போதும் போல் சென்றது... மனோஜும் கீர்த்தியும் நல்ல நண்பர்களாக இருந்தனர்... அன்று வெள்ளிக்கிழமை.. கிருபாவும் அகியும் இந்த வாரம் இராமேஷ்வரம் வருகின்றனர்.. சும்மாவே கீர்த்திக்கு வால் ஒன்றுதான் இல்லை.. இன்றோ சொல்லவா வேண்டும்!!! எப்போதடா காலேஜ் முடியும் என்று காத்திருந்தவள் வாசலை நோக்கி ஓடினாள்.... அங்கு கிருபா தன்னை அழைக்க வந்திருக்க ஓடி சென்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்...

                ஹேய் குட்டிமா.. என்று அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றியவன்.. எப்படிடா இருக்க?? என்றான்...

                ம்ம் சூப்பரா இருக்கேன் அண்ணா.. நீங்க?? அகிமா எங்க?? என்று காரில் தேடினாள்...

                அவ டிராவல்ல டயர்ட்டு ஆகிட்டா டா.. அதான் வீட்ல விட்டுட்டு வந்தேன்... வீட்ல உனக்கு காத்துட்டு இருப்பா... வா நம்ம போலாமா??

               ஓ பாேலாமே... என்று தலையாட்டியவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்...

              வீட்டை அடைந்ததும் அகிமா.. என்று சந்தோஷ கூவலுடன் உள்ளே ஒடியவள்... தன்னை நோக்கி இரு கை நீட்டிய அகியிடம் சரண் புகுந்தாள்... அன்றைய மாலை பொழுது அந்த நால்வருக்கும் இனிமையாக கழிந்தது...

             அகிமா.. நாளைக்கு என்ன பிளான்??

             ம்ம்... தனுஷ்கோடி போலாமா?? என்றாள் கண்கள் மின்ன...

             ம்ம் போலாம் போலாம்.. அண்ணா.. அத்தான்... நாங்க தனுஷ்கோடி போனும்.. கூட்டிட்டு போங்க என்று அவர்களிடம் ஆர்டர் போட்டாள்..

              ஆகட்டும் மகாராணி.. என்று கோரசாக கூறியவர்கள்.. அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றனர்...

               தனுஷ்கோடி (Dhanushkodi) தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.

அகல்யாWhere stories live. Discover now