காலேஜில் காரை நிறுத்தியவன்... இறங்கி வந்து அவளுக்கு கார் கதவை திறந்து விட அவளோ ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டிருந்தாள்...குட்டிமா.. சீக்கிரம் சாப்பிடு... நேரம் ஆச்சு டா..
நான் உங்க கூட பேச மாட்டேன்.. போங்க...
ஏன் டா தங்கம்... என்று அவளை நெருங்கியவன் அவளின் கண்ணத்தில் முத்தமிட்டான்..
ஐஸ் வைய்க்காதேங்க.. போங்க.. என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்...
அவளை தன் புறம் திருப்பியவன்.. என் தங்கம்ல... சீக்கிரம் டா.. அத்தான்க்கு மீட்டிங் இருக்கு டா... என்று அவள் தாடையை பிடித்து கெஞ்சிவனை பார்த்து மனம் இறங்கி.. அவன் கண்ணத்தில் மூத்தமிட்டு அவனுக்கு விடை கொடுத்தாள்..
அவள் முகத்தில் மீசை போட்டிருந்த ஐஸ்கிரீமை தன் கைக்குட்டையால் துடைத்தவன் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பினான்...
அன்று கீர்த்தி மிகவும் குஷியாக இருந்தாள்... அவளுக்கு டெஸ்ட் வைத்த பேராசிரியர் இன்று வரவில்லை.. அதனால் அனைவரும் கேன்டீனில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்...
இன்னைக்கு உன் அத்தான் என்ன வாங்கி குடுத்தாரு?? என்றாள் திவ்யா கீர்த்தியை நோக்கி..
அக்சுவலி இன்னைக்கு நான் காலேஜ் வர மாட்டேன்னு ஒரே அடம்.. அப்புறம் அத்தான் தான் கம்பெல் பண்ணி அனுப்பினாங்க... நான் கோவமா இருந்தேனா.. சோ எனக்கு ஐஸ்கிரீம் கிடைச்சது... என்றாள் குதூகலமாக...
அதை கேட்ட மற்றவர் அனைவரும் அவளை ரசித்து சிரிக்க... மனோஜின் முகம் மட்டும் பயங்கரமாக மாறியது...
இன்னைக்கு எப்படியாவது அவட்ட நம்ம லவ்வ சொல்லிறனும்... என்று எண்ணமிட்டவன்... என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்....
ஹேய் அகி.. நான் போய்ட்டு மதியம் வந்துடுவேன்.. அது வரைக்கும் கவனமா இருக்கனும் டா... ரொம்ப முக்கியமான மீட்டிங்... அதனால தான் சரியா?? என்று பத்தாயிரம் முறையாக அவளிடம் கூறிக் கொண்டிருந்தான் கிருபா.. அவனின் செயலில் தலையில் அடித்துக் கொண்ட அகி.. அவனை மிரட்டி அனுப்பி வைத்தாள்... அவனை அனுப்பியவள் அசதியாக இருக்க.. அப்படியே சரிந்து உறங்க ஆரம்பித்தாள்...