♥17♥

4.9K 148 23
                                    


                   ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது அகியின் அழைப்பு அவனை வானில் பறக்க வைத்தது....

                  ஹாய் டா பப்ளூ.... என்ன பண்ற..... அப்புறம் நான் பேக் பண்ணிட்டு இருக்கேன்.... இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன் ரெடியா இரு.... என்றான் சந்தோஷமாக...

                 கிருபா... நான் கிளம்பிட்டேன்... இனிமே நம்ம சந்திக்க வேண்டாம்... என்ன மறந்துடுங்க... நான் உங்கள லவ் பண்ணல... டைம் பாசுக்கு தான் பழகுனேன்.. நீங்க அத இவ்ளோ டீப்பா எடுத்துப்பேங்கனு நான் நினைக்கலை.. சாரி.. இனிமே நம்ம சந்திக்க வேண்டாம்... என்று அவனை பேச விடாமல் போனை கட் செய்தாள்....

              அதைக் கேட்டவன் திகைத்து நின்றான்... அவனை யாரோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.... அவனால் அவள் பேசிய வார்த்தையை நம்பவே முடியவில்லை...

              டேய்.. என்ன டா?? வா... கிளம்புவோம்.. என்று ராஜிவ் அவனை பிடித்து உளுக்கினான்...

            ம்ம்..என்ன டா... என்று நிஜ உலகிற்கு வந்தான் கிருபா...

           என்ன டா யாரு போன்ல?? அகி தன?? ஏன் இப்படி பேய் அறைஞ்ச மாதிரி நிக்கிற?? என்ன ஆச்சு?? என்றான் பதட்டமாக...

            ஒன்னும் இல்லை டா.. அகி கிளம்பிட்டா.... ஏதோ அவசரம் போல.. வா நம்மலும் கிளம்பலாம்.... உயிர் நண்பனாக இருந்தாலும் அகி கூறியதை அவனிடம் சொல்ல அவன் மனசாட்சி தடையாக இருந்தது... அதற்கு அவன் அவள் பேசியதை நம்பாததே முதல் காரணம்.... தனக்காக ரயில் நிலையத்தில் காத்திருப்பாள்.... விளையாடுகிறாள் என்ற முடிவுடன் அவன் ராஜிவ்வை அழைத்துக் கொண்டு கிளம்பினான்....

             ஆனால் அங்கு அவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது... ராஜிவ்வை வழி அனுப்பிவிட்டு ரயில் ஏறியவனின் மனம் கொதித்தது....

           ஏன் அப்படி பேசினாள்?? எதோ ஆபத்தில் இருக்கிறாளோ??? ஒருவேளை கவின் எதும் செய்திருப்பானோ?? இல்ல இல்ல.. அவன் தான் இப்ப திருந்திட்டானே... என்று அவனாகவே சொல்லிக் கொண்டு பயணித்தான்....  பாவம் கவின் பதுங்கியது பாய்வதற்கே என்பதை அவன் அறிய வாய்ப்பில்லை....

               அகியின் நம்பருக்கு முயன்று பார்த்தான்... தொடர்பில் இல்லை என்று வந்தது....

              சத்யாவை அழைத்தான்...

              சத்யா...

              சொல்லு அண்ணா...

              நி எங்க இருக்க??

              ஊருக்கு தான் அண்ணா போய்டு இருக்கேன்.... ஏன் அண்ணா??

              பக்கத்துல அகி இருக்காளா??

              ம்ம் தூங்குறா அண்ணா... எதும் சொல்லனுமா?? எழுப்பவா??

               இல்ல டா.. வேணாம்... எப்படி இருக்கா??

              ம்ம் எதோ சரியில்லண்ணா... எனக்கும் தெரில.. கேட்டு பார்த்தேன்... இப்ப கூட வெளில வந்துதான் பேசிட்டு இருக்கேன் கதவு பக்கத்துல... உங்களுக்கு நடவுல எதும் சண்டையா அண்ணா??

             எனக்கும் எதும் புரியலமா... எனக்கு ஒரு ஹெல்ப் பண்றயா??

             சொல்லுண்ணா....

             நாளைக்கு மாலை 5 மணிக்கு அவள கடற்கரைக்கு கூட்டிட்டு வாரயா?.? நான் பேசனும்.....

             ம்ம் கூட்டிட்டு வரேன் அண்ணா...

             ரொம்ப தேங்க்ஸ் டா.. பார்த்து போங்க... வைக்குறேன்... நாளைக்கு பார்ப்போம்... என்று போனை அணைத்தான்....

             அவனுக்கு நினைவு எல்லாம் அகியை சுற்றியே இருந்தது.... ஏன் அப்படி செய்தாள்... அப்படி என்ன நடந்துருக்கும்... நம்ம என்ன தப்பு பண்ணோம்.... எதுமே புரிலயே...இப்படி புலம்ப விட்டுட்டாலே... ஆண்டவா.. என்று புலம்பியபடி தன் வீட்டை நோக்கி பயணித்தான்....

                அகி.... நாளைக்கு கடற்கரைக்கு போவோமா??
  
                 ம்ம் பார்ப்போம் டி... எதுமே பிடிக்கல...

                ஹே பிளீஸ் டி... ரொம்ப நாள் ஆச்சு.... போய்ட்டு வரலாம்... 6 க்கு வீட்டுக்கு வந்துடலாம்... அண்ணா நீங்க சொல்லுங்க அண்ணா.. என்று அர்ஜுனை துணைக்கு அழைத்தாள் சத்யா...

                போய்ட்டு வா மா.... சத்யா தான் இவ்ளோ கூப்டுறாளே... என்றான் அவள் தலையை வருடி...

                ம்ம் சரிண்ணா... சரிடி... போலாம்... இப்ப கிளம்பலாம்... பாய்... என்று தன் அண்ணனோடு சேர்ந்து நடந்தாள்......

               அடுத்த நாள் மாலை அவர்கள் வாழ்க்கையையே திருப்பி போட போகிறது என்பதை அறியாமல் இருந்தனர் கிருபாவும் அகியும்..

              அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....

      

     

அகல்யாHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin