♥30♥

6.2K 148 68
                                    


                    அண்ணா... அண்ணா... சீக்கிரம் வா.. நேரம் ஆச்சு...

                    இதோ வந்துட்டேன் டா... நீ ரெடியா??? கிளம்பலாமா???

                    ம்ம் நான் ரெடி அண்ணா... அம்மாக்கு காபி மட்டும் குடுத்துட்டு வந்துரேன்...

                   ம்ம் சரி டா..

                   இருவரும் கடைக்கு கிளம்பி பூஜை அறைக்கு சென்று கண் மூடி நின்றனர்... அங்கு கிருபா போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தான்...

                   ஏன் கிரபா... என்ன விட்டு போனேங்க?? இன்னைக்கு எவ்ளோ முக்கியமான நாள் தெரியுமா??? நீங்க ஆசைபட்ட நாள்... நம்ம சூப்பர் மார்க்கெட் தமிழ்நாட்ல எல்லா ஊர்லயும் நம்பர் ஓன இடத்துல இருக்கு.... இன்னைக்கு நமக்கு பெஸ்ட் சூப்பர் மார்க்கெட்னு அவார்ட் குடுக்க போராங்க... இத வாங்க நீங்க இல்லயே... என்று கண்ணீர் வடித்தாள் அகி...

                கிருபா அவர்களை விட்டு பிரிந்து இரண்டு வருடம் சென்று விட்டது..... அகியும் அர்ஜுனும் அத்தையை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்கே வந்து விட்டனர்... அத்தை வீட்டை பார்த்துக் கொள்ள... இருவரும் கிருபாவின் கனவை நிறைவேற்ற சூப்பர் மார்க்கெட்டை நங்கள் பொருப்பில் ஏற்று திறமையாக நடத்தி வந்தனர்... அதற்கு சான்றாக இதோ இன்று சிறந்த சூப்பர் மார்க்கெட் என்ற பட்டம் இவர்களுக்கு கிடைக்க உள்ளது....

                 இந்த இரண்டு வருடத்தில் அகி எவ்வளவோ தேறி இருந்தாள்.... முக்கியமாக மற்றவர்களுக்காக தன் துக்கத்தை மறைக்க கற்றுக் கொண்டாள்.... அவளின் சிரிப்பு உதட்டில் புன்னகையுடன் நின்றுவிட்டது... இந்த இரண்டு வருடத்தில் அவள் வாய் விட்டு சிரித்து ஒருவரும் பார்த்தது இல்லை என்றே சொல்லலாம்.... கிருபாவின் இழப்பு அவளை செதுக்கியது.... அவள் உழைத்தாள் தன்னவனின் ஆசையை நிறைவேற்ற இரவு பகல் பாராமல் உழைத்தாள்.... முன்னேறினாள்... கடையை முன்னேற்றினாள்...

               அன்ட் த அவார்ட் கோஸ் டூ mrs.அகல்யா அன்ட் mr.அர்ஜுன்... என்ற கரவொலியுடன் இருவரும் மேடி ஏறினர்... ஆவார்ட் வாங்கியவுடன் அகிக்கு மைக் கொடுக்கப்பட்டது....

               குட் ஈவினிங் எவ்ரிபடி.... இந்த அவார்ட் எங்களுக்கு கிடைச்சதுல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.... இந்த ஆவார்டுக்காக இல்ல இது என் ஹஸ்பன்டோட ஆசை... அதை நிறைவேத்திட்டேன்னு நினைக்குறப்ப நான் வானத்துல பறக்குற மாறி இருக்கு... இதுக்கு எனக்கு உறுதுணையா இருந்த என் அண்ணா அர்ஜுன்க்கு நன்றி.... இப்ப என்ன நினைச்சு என் கணவர் கண்டிப்பா பெருமையா நினைப்பார்... அவர் இப்ப இந்த உலகத்துல இல்லைனாலும் அவர் என் மனசுல வாழ்ந்துட்டு தான் இருக்கார்.... எப்போதும் வாழ்வார்... தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்... அதற்கு மேல் பேச முடியாமல் மைக்கை அர்ஜுனிடம் குடுத்தாள்...

            அவளின் நிலை கண்டு தன் தோலோடு சேர்த்து அணைத்து மைக்கை பற்றி பேச ஆரம்பித்தான்.... அகி சொன்னது தான் நானும் சொல்வேன்... கிருபா நீ எங்க உயிர்ல இருக்கடா.. எங்க மூச்சுல இருக்க டா... நாங்க பேசுற வார்த்தைல இருக்க... நீ எங்கல விட்டு எங்கயும் போக மாட்ட... என் நண்பன் என் கூடவேதான் இருப்பான்.... ஐ லவ் யூ டா... அன்ட் ஐ மிஸ் யூ... ஐ மிஸ் யூ... என்ற அவனின் குரலும் உடைந்தது.... இருவரையும் பார்த்த அனைவரின் கண்களும் கலங்கியது....

              இருவரும் மைக்கை ஒப்படைத்துவிட்டு இறங்கி வந்தனா்....

              ஹலோ போத் ஆப் யூ.... ஐ ஆம் கிஷோர்... ஏ.கே புட்ஸ் சேர்மேன்...

             ஹோ.. ஹலோ சார்...

            ஹோ நோ... கால் மீ கிஷோர்...

            ஓகே.. ஹாய் கிஷோர்... வாட் கேன் வி டு பார் யூ???

            அவர்களிடம் அறிமுகமான கிஷோர் பின் இருபதுகளில் இருந்தான்... ஒருதடவை பார்ப்பவரை திரும்பி பார்க்க வைக்கும் முக அமைப்பு....

              திஸ் இஸ் மை விஸிட்டிங் கார்ட்.. ஐ வில் பி வெரி ஹேப்பி இப் யூ விஸிட் மை இன்டஸ்டிரி... ப்ளீஸ் கம்... ஐ வில் அரேன்ஜ் பார் யுவர் ஜர்னி.... டேக் டூ டேஸ் டைம்.. அன்ட் ரிப்லை மீ.. என்று அவர்கள் இருவரிடம் கூறிவிட்டு தன் விஸிட்டிங் கார்டை அர்ஜுன் கையில் குடுத்துவிட்டு... இருவரிடமும் விடைபெற்று சென்றான்...

               சென்றவனை பார்த்தபடியே நின்றிருந்தனர் இருவரும்...

               அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்...

அகல்யாWhere stories live. Discover now