♥22♥

4.8K 149 41
                                    

  அடுத்த பக்கத்தில்...

வாழ்க்கை மிக அழகாக செல்கிறது... அன்பான அண்ணா.. அதற்கும் மேலே உன் உயிராக கிருபா.. வேறு என்ன வேண்டும் எனக்கு??? அண்ணாவிடம் கிருபாவை பற்றி கூற வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன்... ஆனால் தயக்கமாக இருக்கிறது... இந்த முறை கூறி விட வேண்டும்... அடுத்த வாரம் ஊருக்கு செல்கிறேன்.. பார்ப்போம்...

அடுத்த பக்கத்தில்...

இன்று நானும் கிருபாவும் மட்டும் ஊருக்கு செல்கிறோம்... சத்யா எங்களுடன் வர வில்லை... அவள் ராஜிவ் அண்ணாவுடன் அவர் வீட்டிற்கு செல்கின்றாள்.... கிருபாவுடன் தனிமை.. நான் மிகவும் விரும்பியது.... நாங்கள் சென்ற பேருந்தில் கூட்டமே இல்லை... கடைசிக்கு முந்தின இருக்கையில் அமர்ந்தோம்... கிருபா தன் கையோடு என் கையை கோர்த்துக் கொண்டான்... நான் அவன் தோலில் சாய்ந்தேன்... எவ்வளவு இன்பம் தெரியுமா??? என்னவனின் தோல்கள்... அங்கு மௌனம் தன் ஆட்சியை நடத்தியது.... சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன் போல... எழுந்த போது அவன் மடியில் தலை சாய்த்திருந்தேன்.... எனக்கு பெருமிதமாக இருந்தது.... இவன் என்னுடையவன்... எனக்கு மட்டுமே சொந்தமானவன்.... யாரும் இவனை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது....

அதை படித்தவனின் முகத்தில் கர்வம் தெரிந்தது... இவள் எனக்கானவள் என்ற கர்வம்... அடுத்த பக்கத்தை புரட்டினான்....

இந்த முறையும் நான் அண்ணாவிடம் கிருபாவை பற்றி கூறவில்லை... ஏன் என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.... பதில் தான் கிடைக்கவில்லை...

அடுத்த பக்கத்தில்

இன்று கல்லூரியில் இருந்து டூருக்கு செல்கிறோம்... என் கிருபாவுடன்... நினைக்கவே தித்திப்பாக உள்ளது....

அதைத் தொடர்ந்து

இன்று கிருபா என்னை குகைக்கு அழைத்து சென்றான்.... இருவரும் தங்களை மறந்து நின்றிருந்தோம்... எவ்வளவு நேரமோ யார் அறியார்??? ராஜிவ் அண்ணாவிடம் இருந்து வந்த காலில் திரும்பி சென்றோம்....

அகல்யாWhere stories live. Discover now