♥8♥

5.4K 167 29
                                    


                    நாட்கள் விரைந்தோடியது.... ஒரு மாதம் சென்றிருந்தது.... அன்று வியாழக்கிழமை... வெள்ளியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமறையாதலால்... சத்யாவும் அகல்யாவும் ஊருக்கு பறப்பட்டனர்.... மதுரை ரயில் நிலையம் சென்று ரயில் ஏறினர்... கிருபாவும் உடன் வந்தான்... அகி சென்று ஜென்னல் சீட்டில் அமர... சத்யா அவள் அருகில் அமர்ந்தாள்... கிருபா எதிர்புறம் ஜென்னல் சீட்டில் அமர்ந்தான்.... எதிரில் அமர்ந்திருந்த அகியை அவளுக்கு தெரியாமல் சைட்டு அடித்தபடி பயணம் செய்தான்... அகி இயற்கை அன்னையை ரசிக்க ஆரம்பித்தாள்... சத்யா பின்புறம் சாய்ந்து உறங்கியதால் கிருபாவை கவனிக்கவில்லை..

                 இந்த ஒரு மாதத்தில் ஒரு முறை தான் அகல்யா அவனிடம் பேசினால்.. அதும் அவன் செய்த உதவிக்கு நன்றி கூற மட்டுமே.... இந்த ஒரு மாதத்தில் அவள் கிருபாவின் உயிர் ஆனாள்... எந்நேரமும் அவளை பற்றியே பேசி ராஜிவ்வை அவன் கடுப்பேற்றினான்....

                 மூவரும் இராமேஷ்வரம் சென்றடைந்தனர்... எப்பாேதும் போல் அகிக்கு அண்ணனும் சத்யாக்கு அப்பாவும் வர இருவரும் கிளம்பினர்... கிருபா இரண்டு வார்த்தை சத்யாவின் அப்பாவிடம் நலம் விசாரித்து விடைபெற்றான்....

               அகியும் அர்ஜுனும் ஸ்டேஷனை விட்டு வெளியே வர கிருபா அவர்களை பின் தொடர்ந்தான்.... அவர்கள் மூவரும் வாசலில் நிற்க அப்போது ஒரு விலை உயர்ந்த கார் அகியின் அருகே வந்து பிரேக் போட்டது... அதை சிறிதும் கவனியாமல் நின்றிருந்தவள்... திடீர் என்று கேட்ட சத்தத்தில் பயந்து அண்ணணை ஒன்டினாள்.... அவளை ஒரு கையால் அணைத்தவன்... என்னடா குட்டி?? இதற்கெல்லாமா பயப்படுவார்கள்.. வா.. போலாம்... என்று அவளை அழைத்து சென்றான்...

             அவளும் அவனுடம் நடந்தாலும் திரும்பி அந்த காரை பார்த்தபடியே சென்றாள்... அந்த காரில் அவளை பார்த்தவாறே கிருபா ஏறினான்...

            அதை கண்டவளின் முகம் பயத்தை காட்டியது... கிருபாவின் நெற்றி சுருங்கியது... இவள் ஏன் காரை பார்த்து பயப்படுகிறாள்... என்று சிந்தித்தபடியே வீட்டை நோக்கி காரில் பயணித்தான்...

           வீட்டை வந்தடைந்தவனை அகிலாண்டேஷ்வரி அத்தை ஹாலில் வரவேற்றார்...

          வாப்பா கிருபா.. எப்படி இருக்க??

          நல்ல இருக்கேன் அத்தை... நீங்க??

         ம்ம் எனக்கு என்னப்பா.. இருக்கேன்... சரி போய் குளிச்சுட்டு வா.. சாப்டலாம்...

         ம்ம் இதோ அத்தை... என்று மாடிபடியேறி சென்றான்...

        கிருபாகரன் ஏகப்பட்ட சொத்திற்கு ஒரே வாரிசு... அப்பா அம்மா அவன் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது இறந்து விட... வாழ்வே சூனியமாக நின்றிருந்த தன் அண்ணன் மகனை தன் பொருப்பில் ஏற்றார் அகிலாண்டம்... அவள் அந்த தொழில் சாம்ராஜ்யத்தை கவனிக்க அவன் தன் படிப்பை தொடர்ந்தான்...

              அகிலாண்டம் கிருபாவின் மேல் பாசம் அதிகம்... தனக்கென்று பிள்ளை இல்லாததால் அவனை தன் பிள்ளையாக நினைத்து வாழ்ந்து வருகிறார்...

            சிறிது நேரத்தில் துள்ளி வரும் கிருபாவை பார்த்தவரின் முகம் மலர்ந்தது.... அவனை அழைத்து சென்று சாப்பாடு பரிமாறியவர் தானும் அருகில் அமர்ந்தார்...

           நீங்களும் சாப்டுங்க அத்தை...

         நீ சாப்டு அப்புறம் நான் சாப்டுக்குறேன்...

        டெய்லி தனியாதன சாப்டுறேங்க... நான் வீட்டுக்கு வரும்போதுதான் ஒன்னா சாப்ட முடியும்.. வாங்க.. என்று அவருக்கும் பறிமாறினான்... இருவரும் பேசியபடியே சாப்பிட்டு முடித்து ஹாலில் அமர்ந்தனர்...

        சிறிது நேரம் கல்லூரி.. தொழில் அனைத்தையும் பேசிவிட்டு படுக்க சென்றான்....

        தன் ரூமில் நுழைந்து தன் போனின் டிஸ்பிலேயை ஆன் செய்தவன் அதில் அகி தெரிய அவளிடம் கனவில் பேசியபடியே துயில் கொண்டான்...

         அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....

                

அகல்யாWhere stories live. Discover now