கீர்த்தியின் பதிலை கேட்டவன் சிறிது நேரம் பேசவே இல்லை... பின்பு அவள் புறம் திரும்பியவன்... கீர்த்திமா... உன்ன இது வரைக்கும் யார்லாம் கிஸ் பண்ணிருக்கா?? என்றான் நெற்றியை சுருக்கி...ம்ம்.. என்று யோசித்தவள்... அப்பா... கிஷோர் அண்ணா... கிருபா அண்ணா... அகிமா... அப்புறம் நீங்க...
எங்கள தவிற வேற யாரும் உன் கைய பிடிக்குறது அப்பறம் கிஸ் பண்றது.. இப்படி எதும் பண்ணிருக்காங்கலா??
அதற்கும் சிறிது நேரம் யோசித்தவள்.... ஆங்.. நான் பர்ஸ்ட் இயர் படிக்கும் போது.. ஒரு தடவ நான் மட்டும் கிளாஸ்ல இருந்தேனா.. அப்ப அந்த குமார் எரும.. என் பக்கத்துல வந்தான் அத்தான்... நான் ரொம்ப பயந்துட்டேன்.. அப்புறம் என் கைய பிடிச்சு இழுத்து கட்டி புடுச்சு கண்ணத்துல கிஸ் பண்ண வந்தான்.... எனக்கு அவன பிடிக்கவே இல்ல... நான் ரொம்ப அழுதேனா... அப்புறம் என்னோட ப்ரண்ட்ஸ் வந்துட்டாங்க... அதனால் என்ன விட்டுட்டான்.... நானும் அவன தள்ளி விட்டுட்டு ஓடிட்டேன்.... ஈவினிங் வீட்டுக்கு வந்து அண்ணாட்ட அழுதேனா... அப்புறம் நெக்ஸ்ட் டேல இருந்து அந்த குமார் வரேவ இல்ல அத்தான்... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது தெரியுமா... என்று அவனை பார்த்து திரும்பினாள்...
அவ்வளவு நேரம் குனிந்தபடி சொல்லிக் கொண்டிருந்தவள்... இப்போது தான் அவன் முகம் பார்த்தாள்... அவனின் முகம் ஏன் இவ்வளவு கோபமாக உள்ளது.. என்று நினைத்தவள் திகைத்து... அவனை நெருங்கி அமர்ந்து தோல் தொட்டாள்... அத்தான் அத்தான்... என்று அவனை உலுக்கியவள்...அவனிடம் எந்த மாறுதலும் இல்லாததால் எப்பயும் போல் அவளுக்கு அழுகையே வந்தது... உதடை பிதுக்கியபடி அழ ஆரம்பித்தாள்....
அவளின் அழுகை குரலில் சுய நினைவுக்கு வந்தவன்... இப்போ எதுக்கு அழுறா?? இவள கட்டிட்டு நான் தான் அழனும்.... என்று நினைத்து தலையில் அடித்தவன்.... அவளை தோலோடு அணைத்தான்....
அவன் அணைத்ததும் அவன் மடியில் சாய்ந்தவள்.... அவனின் இடுப்பை கட்டிக் கொண்டு அழுதாள்... அவளின் சிறு பிள்ளை தனத்தில் கவரப்பட்டவன் அவளை நிமிர்த்தி தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தான்....