ஹலோ.. என்றது அந்த பெண்ணின் குரல்... அந்த குரலில் இருந்தே அது ரொம்ப நேரம் அழுது கலைத்திருந்தது என்பதை ராசுவால் புரிந்து கொள்ள முடிந்தது...அம்மா... கிஷோர் அம்மா அப்பா இல்லயா??
கிஷோரா.. நீங்க யாரு சார்?? நான் அவரோட தங்கை தான் பேசுரேன்... அவர பத்தி விசாரிக்க தன கால் பண்ணேங்க.. அவர் தான் போய் சேந்துட்டாரே... அய்யோ என்று கதறினாள் அவள்...
அம்மா.. அம்மா நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க... என் பேரு ராசு... நான் கொல்லிமலை பக்கத்துல இருக்குற பூந்தென்றல் கிராமத்துல இருந்து பேசுறேன்.. என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் கூறி அவர்களை வர சொன்னான்...
அவன் கூறியதில் இருந்து இன்னும் விடுபடாமல் இருந்தவளை யாருமா போன்ல... என்ற அவளின் தந்தையின் குரல் களைத்தது...
அப்பா.. அப்பா... அண்ணா... அண்ணா.. நம்ம இப்ப பூந்தென்றல் கிராமத்துக்கு போனும் அப்பா... அண்ணன் அங்க இருக்கானாம்.. நான் அவன்ட்ட போனும்.. கூட்டிட்டு போங்கப்பா.. என்று அவரின் நெஞ்சில் சாய்ந்து கதறினாள்...
கீர்த்தி...இங்க பாரு.. என்ன டா?? யாரு போன்ல.. என்ன சொன்னாங்க?? அவன் தான் நம்மல விட்டுட்டு போய்டானே.. என்று அவர் கூறும் போதே அவரின் குரலும் உடைந்தது...
இல்லப்பா.. அவன் இருக்கானாம்.. என்று போனில் கூறியது அனைத்தையும் கூறினாள்...
கிருபாவை கிஷோராக நினைத்தது யார் தவறு?? தெரிந்த ஒரே பெயரை கூறிய ராசுவின் தவறா... இல்லை அவன் கூறிய இரண்டு பேரில் தன் அண்ணன் தான் உயிருடன் இருக்கான் என்று நம்பிய கீர்த்தியின் தவறா???
பாவம் அவளும் என்ன செய்வாள்?? பிறக்கும் போதே தாயை இழந்து தந்தை குடும்பத்தை தாங்க முடியாமல் கம்பேனி என்று அழைந்து.. தன் அண்ணனே உலகம் என்று வாழ்ந்தவள் அவள்.. அவன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதில் இருந்து தன்னுள் நொருங்கிவிட்டாள்... அந்த நேரத்தில் இப்படி ஒரு கால் வர தன் அண்ணன் உயிருடன் இருக்கிறான் என்ற எண்ணத்தில் தன் தந்தையை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்...
ஆனால் அவர்கள் சென்ற போது பார்த்ததோ கிஷோரின் உயிர் அற்ற உடலைத்தான்...
அவனின் உடலின் மேல் விழுந்து கதறினாள்.... ஆனால் அவன் எழவில்லை... தன் தங்கையின் சிறு முகச்சுழிவை கூட தாங்காத அண்ணன் இன்று அவள் கதறும் போது அவளை தேற்ற அருகில் இல்லை....
அப்போது கிஷோரின் தந்தையை அழைத்த டாக்டர் கிருபாவின் உடல் நிலையை விளக்க ஆரம்பித்தார்...
ஹலோ சார்.. இந்த நிலைமைல உங்கட்ட இத பத்தி பேச கூடாது தான் ஆனா உங்க ஸன்னோட கடைசி ஆசை அவர் நண்பன காப்பாத்துறதுதான்னு அவர அட்மிட் பண்ணவங்க சொன்னாங்க...
அவர் பிரண்டோட நிலைமை கொஞ்சம் கிரிட்டிக்கல் தான்... அவர் தன் நினைவை இழந்துட்டார்.. அவர் நினைவு அகினு ஒரு பொண்ணு பேர மட்டும் தான் தாங்கிட்டு இருக்கு... வேற யார் நினைவும் அவருக்கு இல்ல..அது மட்டும் இல்லாம அவர் முகத்துல புல்லா கண்ணாடி குத்தி கிழிச்சுருக்கு... சோ அவர் முகம் நமக்கு அடையாளம் தெரியிற மாறி இல்ல.. சோ ஒரே ஆப்ஷன் பிளாஸ்டிக் சர்ஜரிதான்.... அதும் இங்க பண்ண முடியாது... அவர உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர்ட்ட காட்டிக்கோங்க.. அவர் டிஸ்சார்ஜ் வேலைய நான் பாத்துக்குறேன்.... முடிவு உங்க கைலதான்...
டாக்டர் சொன்ன அனைத்தையும் கேட்டவருக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.... கிஷோர் கிருபாவின் மூலமாக தன்னிடம் தான் இருக்கிறான் என்று அவர் நம்பினார்... அதனால் கிருபாவை தன் பொருப்பில் ஏற்று கிஷோரின் பாடியையும் பெற்று கொண்டு தன் பெண்ணுடன் சென்னை நோக்கி பயணித்தார்...
அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்.....