தங்கள் உலகில் இருந்தவர்களை மீண்டும் கிருபாவின் போன் சுய உணர்வுக்கு கொண்டு வந்தது...ம்ம் சொல்லு டா...
டேய் பன்க்ஷன் முடிந்தது.... வாரயா?? போலாம்??
ம்ம் இதோ வந்துட்டேன்... என்று போனை கட் செய்தான்...
அகிம்மா... நேரம் ஆச்சு...நான் கிளம்பனும்... என்றதும் அவள் எங்கு அவன் தன்னை விட்டு சென்றுவிடுவானோ என்ற பயத்தில் அவனை இறுக்கிக் கொண்டு மார்பில் சாய்ந்தாள்...
கண்ணம்மா... இங்க பாருடா செல்லம்... நான் எங்கயும் போக மாட்டேன்.. சரியா??
அவள் அவனை நம்ப முடியாத பார்வை பார்த்தாள்...
நம்புடா... நான் சீக்கிரமே உன்ன பெண் கேட்டு வரேன்... அத்தை நான் சொன்னா கேப்பாங்க... சரியா?? இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் நீ தான் என் மனைவி... என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை சமாதானம் செய்து பிரியாவிடை பெற்றான்...
அகிக்கு நாட்கள் ஆமை போல் நகர்ந்தது.... அவள் சீனியர் ஆகிவிட்டாள்... செகன்ட் இயர்...
அன்று பீஜி பர்ஸ்டு இயர்க்கும் யூஜி பர்ஸ்டு இயர்க்கும் காலேஜ் ஓபன்... கல்லூரிக்கே உரிய கலாட்டாவுடன் தங்கள் ஜுனியரை வரவேற்றனர்....
ஹே அகி..
என்னடி??
நம்ம ராஜிவ் இங்க தான் பீஜி சேந்துருக்கான் தெரியுமா?? சத்யாக்கும் ராஜிவ்க்கும் ஏழாம் பொருத்தம்... ஒரு நாள் கூட சண்டை போடாமல் இருந்ததில்லை... அதனால் அவள் அவனை பெயர் சொல்லியே அழைப்பாள்....
ஓ அப்படியா.. எனறாள் அகி சுரத்தேயில்லாமல்....
என்ன டி... அப்படியானு முடிச்சுட்ட.. வா போய் நலம் விசாருச்சுட்டு வரலாம்....
நீ போ டி.. நான் அப்புறம் வரேன்...
ரொம்ப சீன் போடாத வா.. என்று அவளை எப்பொழுதும் போல் இழுத்துச் சென்றாள் அவள்...