♥21♥

4.8K 149 19
                                    

கிருபா அடுத்த பக்கத்தை புரட்டினான்...

இன்று நான் என்னவன்னை சந்தித்தேன்... அது எப்படி ஒரே பார்வையில் காதல் வர முடியும்??? வந்ததே.... ஆயிரம் பேர் மத்தியில் நான் என்னவன்னை நோக்கி சென்றேன்... ஆனால் என் பயம் எனக்கு எமனாக போய் விட்டது... விளைவு அவன் கைகளிலேயே மயங்கி சரிந்தேன்.... ஆனால் இதிலும் ஒரு நன்மையாய்... என்னவனின் கைகளில் நான்....

அதைபடித்தவனின் இதழ்களில் அவனையறியாமல் புன்னகை அரும்பியது..... முதல் பார்வையில் காதலாமே... அப்புறம் ஏன் விலகி செல்கிறாள்... என்ற புதிரை கண்டுபிடிக்க அடுத்த பக்கம் திருப்பினான்...

தினமும் அவனை பார்க்கிறேன்... அவன் சத்யாவின் அண்ணனாம்.... அதனால்தான் என்னவோ அவனிடம் காதலை கூற மனம் வரவில்லை.... அவன் என்னை தவறாக நினைத்துவிட்டாள்... அவன் என்னை பார்க்கும் பார்வையில் வித்யாசம் தெரிகிறது... ஆனால் அவனாக கூறாமல் நான் என்ன தான் செய்வது???

புன்னகையுடன் அடுத்த பக்கம் திருப்பினான் அவன்....

நாளையோடு இந்த கல்லூரியில் அவனுக்கு கடைசி நாள்.... மனம் பாரமாக இருக்கிறது.... அவன் இன்னும் என்னிடம் எதும் கூறவில்லை... நான் அவனுக்கு ஒன்றுமே இல்லயா????

அடுத்த பக்கத்தில்....

இன்று என்னவன் என்னிடம் காதலை கூறிவிட்டான்.... என்னை போல் மகிழ்ச்சியுடன் இந்த நாளை களித்தவர் எவரும் இல்லை.... முதல் இதழ் தீண்டல்.... என்னை சொர்கத்திற்கு அழைத்து சென்றது... கள்வன் அவன்.... தன் இதழ்களாலேயே கவி பாடினான்.... எனோ அவன் இதழ் தீண்டலில் தொலைந்து விட ஆசை... ஆனால் சுற்றத்தை கருத்தில் கொண்டு விலகினோம்...

அடுத்த பக்கத்தை திருப்பிய போது...

இன்று இரண்டாம் ஆண்டு முதல் நாள்.... எனோ கல்லூரி செல்லவே பிடிக்கவில்லை... என்னவன் இல்லாத கல்லூரிக்கு நான் ஏன் செல்ல வேண்டும்???

கிருபா அடுத்த பக்கத்தை திருப்பினான்....

இன்று என் கிருபா எங்கள் கல்லூரியிலேயே பீஜி சேர்ந்துவிட்டான்.... அவனை பார்த்த நொடி ஓடி சென்று கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல்... ஆனால் சத்யாவும் ராஜிவ் அண்ணாவும் இருந்ததால் வேறு வழி இல்லாமல் தனிமைக்காக காத்திருந்தேன்....

அடுத்த பக்கத்தில்...

இன்று என்னவனை தனிமையில் சந்தித்தேன்... சத்யா அறியாமல்.... என்று அவர்கள் சந்தித்ததை பற்றி அதில் குறிப்பிட்டிருந்தாள்.... கிருபா நினைவு அந்த நாளிற்கு சென்றது....

அன்று அவன் கல்லூரி மொட்டை மாடியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான்... மொட்டை மாடியை யாரும் பயண்படுத்தக் கூடாது... வாட்ச்மேன் அண்ணா... இவனிடம் சாவியை கொடுத்து தண்ணீர் டேங்க்கை திறந்துவிட்ட வரும்படி கேட்டுக் கொண்டார்... அதற்காக அவன் வந்திருந்தான்... தண்ணீர் டேங்க்கை திறந்துவிட்டு திரும்பியபோது அகி இவனை நோக்கி வந்தாள்.... அந்த நேரத்தில் அவளை எதிர்பார்க்காதவன் ஒரு நொடி திகைத்தான்... ஆனால் அதை கண்டு கொள்ளும் மூடில் அவள் இல்லை... நேராக அவனை நோக்கி ஓடி வந்தவள் அவனின் கழுத்தில் மாலையாக தொங்கி இதழோடு இதழ் பொருத்தினாள்... அந்த முத்தம் எவ்வளவு நேரம் நீடித்ததோ இருவருமே அறியார்... முதலில் சுதாரித்தது கிருபாதான்... அவளை தன்னிடம் இருந்து பிரித்தான்... இன்னும் சுயநினைவுக்கு வராதவள் தல்லாடினாள்.... அவளை தன் மீது சாய்த்தபடி நடந்த சென்று மொட்டை மாடி படிகட்டில் அமர்ந்தான்.... அவளை தன் அருகில் அமர்த்தினான்.... வார்த்தைகள் அற்ற மௌனம் அங்கே ஆட்சி செய்தது.... சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் அவன் மடி சாய்ந்தாள்... அவனும் அவளின் முடி கோதினான்.... அவனுக்கு தெரிந்தது... அவள் அவனுக்காக மிகவும் ஏங்குகிறாள் என்பது... கொஞ்ச நேரம் முடி கோதியவன்....அகி... என்றான் மென்மையாக... அவன் தொடையில் முகம் புதைத்திருந்தவள் அவனை நோக்கி முகத்தை திருப்பினாள்....

           அகிமா... வா கீழே போகலாம்... என்றான் மென்மையாக... ஆனால் அடுத்த நொடி அவளின் கரம் அவன் கழுத்தை வளைத்தது... அவளை நோக்கி இழுத்தது... அவன் இதழோடு இதழ் பொருத்தியது.... கிருபாவிற்கு தான் அன்று அவளை கிளப்ப திண்டாட்டமாகி போனது... அந்த நினைவுகளில் மூழ்கியவனின் கண்கள் அவனையும் அறியாமல் கண்ணீர் சிந்தியது....

அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....

அகல்யாWhere stories live. Discover now