மனோஜ் கூறி முடித்ததும் அர்ஜுன் கடகடவென சிரித்தான்... ஹேய் மேன்... நீ யார்ட்ட பேசிட்டு இருக்கனு தெரியுமா??நீங்க யாரா வேணாலும் இருங்க.. எனக்கு கீர்த்தி தான் வேணும்.. அவள மட்டும் எனக்கு தந்துடுங்க.. ப்ளீஸ்..
டேய்.. லூசாடா நீ.. என்றான் புன்னகையுடன் அர்ஜுன்.. இங்க பாரு.. இப்பயும் உன் மேல எனக்கு சத்தியமா கோவமே வரல.. பட் இப்படியே லூசு மாறி உளரிட்டு இருந்தேனா.. மவனே உன் சாவு என் கையாலதான்... என்று பேசிக் கொண்டிருக்க.. கீர்த்திக்கு லேசாக முழிப்பு தட்டியது.. லேசாக புரண்டு படுத்தவள்... அத்தான்.. என்று முணங்கலோடு எழுந்தாள்...
மனோஜோடு பேசிக் கொண்டிருந்தவன் கீர்த்தியின் அசைவில் பேச்சை நிறுத்திவிட்டு அவளிடம் திரும்பினான்... அவன் காலரை பிடித்து அருகில் இழுத்தவள் அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு குட் மார்னிங் அத்தான் என்றாள் கண்களை மூடியபடியே...
குட்டிமா.. இது மதியம் டா தங்கம்... எந்திரி.. சாப்டலாம்.. என்றான் அவளின் முடி கோதி... அவனின் கூற்றில் எல்லாம் நியாபகம் வர... சற்றென்று அவளின் உடல் தூக்கிப் போட்டது.. நன்றாக கண்ணை முழித்து பார்த்தவள் மனோஜை கண்டு இன்னும் அர்ஜுனோடு ஒண்டி அவனின் மார்பில் முகம் புதைத்தவள்.. அத்தான் இவன் என்னன்னமோ சொல்றான்... எனக்கு பிடிக்கவே இல்ல.. என்றாள் முணங்களாக...
ஷ்.. கண்ணம்மா... அதான் அத்தான் இருக்கேன்ல.. அவன் தெரியாம சொல்லிருப்பான்.. இப்ப குட்டிமாட்ட சாரி கேக்க சொல்லிரலாம்.. சரியா... இதுக்கா பயப்படுவாங்க... என் குட்டிமா போல்ட் கேர்ல் தன.. என்று அவளை சமாதானம் படுத்தியபடி நிமிர்ந்து மனோஜை பார்த்தான்...
அவனோ அவர்கள் இருவரையும் வெறித்தபடி உக்காந்திருந்தான்....
சொல்லு மனோஜ்.. கீர்த்திட்ட என்ன சொன்ன??ம்ம் அது.. அத.. நான்... நான் கீர்த்திய..
நீ சொல்றதுக்கு முன்னாடி இதையும் தெரிஞ்சுக்கோ... கீர்த்தி எப்பயுமே உனக்கு கிடைக்க மாட்டா... இது நல்லா புரிஞ்சுக்கோ.. சரியா??