கிருபாவும் அத்தையும் அகியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அகி தன் ரூமில் அன்னையின் சேலையில் தூக்கிட்டுக் கொண்டிருந்தாள்....அதை பார்த்த இருவரும் ஸ்தம்பித்து நின்றது ஒரு சில கணங்களே... அடுத்த நொடி கிருபா ஓடி சென்று அவளை தன் கைகளில் தாங்கினான்....
மூச்சுப்பேச்சில்லாமல் இருந்த அகியை தன் கைகளில் தாங்கி மருத்துவமனைக்கு ஓடினர்...
அவள் ICU வில் அனுமதிக்கப்பட்டாள்...
அங்கிருந்த சேரில் அமர்ந்து விட்டத்தை வெரித்து பார்த்துக்கொண்டிருந்த கிருபாவை அவன் அத்தை அருகில் அமர்ந்து தோலை தொட்டார்....
அடுத்த நொடி அவன் கதறிவிட்டான்.... அத்தை அத்தை எனக்கு அவ வேணும்... அய்யோ என்னால முடிலயே... அவ ஏன் அத்தை என்ன நம்பவே இல்ல?? அவ்ளோ மோசமானவனா நான்?? எதயுமே என்ட சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாளே.... அய்யோ... என்னால முடிலயே... அவளுக்கு ஒன்னும் ஆகாதுல அத்தை.... எனக்கு பயமா இருக்கு....
சிறு பிள்ளை போல் கதறும் தன் அண்ணன் மகனை கண்ட அந்த தாய்க்கு மனம் பிசைந்தது.... அடுத்த என்ன ஆகும் என்று அரிய அவர் என்ன ஞானியா?? அவரும் டாக்டரின் வரவிற்கு காத்திருந்தார்....
ஒரு மணி நேரம் சிகிச்சை அளித்து அதன் பின் டாக்டர் அகியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற செய்தியுடன் வந்தார்.....
டாக்டர் நான் அவளை பார்க்கலாமா??ஓ கண்டிப்பா... மிஸ்டர் கிருபாகரன்... போய் பாருங்க...
அடுத்த நொடி மின்னல் வேகத்தில் அவன் உள்ளே சென்றான்....
தோய்ந்து போய் பெட்டில் படுத்திருந்த தன் உயிரை ஒடி சென்று தன் மடியில் தாங்கினான்....
அகி.. அகிம்மா... பாரு டா உன் கிருபா வந்துருக்கேன்... ஏன் டி இப்படி பண்ண.. நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்.... சாரி டா.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்... சாரி டா.. இனிமே உன்னவிட்டு பிரியவே மாட்டேன்.... ப்ராமிஸ் என்று அவளை மடியில் தாங்கி பிதற்றிக்கொண்டிருந்தான்....