மறுநாள் காலை அழகாக விடிந்தது.... அதிகாலையிலேயே எழுந்த அர்ஜுன் தன் மார்பில் தலை வைத்து குழந்தையாக உறங்கிக் கொண்டிருந்த கீர்த்தியை பார்த்தான்... கீர்த்தியின் தலை அர்ஜுனின் மார்பில் இருக்க.. கை அவனை இடுப்போடு கட்டியிருக்க... ஒரு காலை அவன் கால் மேல் போட்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் அவள்... அவளை வெகுவாக ரசித்தவன்.. அவள் தூக்கம் கலையாத வண்ணம் அவளை தன்னிடம் இருந்து பிரித்து படுக்க வைத்தான்... அவனின் விலகலில் தூக்கம் கலைய மெல்ல சிணுங்கினாள் அவள்.. அவளை தட்டிக் கொடுத்து உறங்க வைத்துவிட்டு... பாத்ரூமிற்கு சென்று குளித்து திரும்பி வரும் வரைக்கும் அவள் அந்த நிலைமையிலேயே இருக்க.. அவளை எழுப்பாமல் அறையை விட்டு வெளியேறினான்...ரூமைவிட்டு வெளியேறிய அர்ஜுன் ஹாலில் சென்று அமர... சிறிது நேரத்தில் குளித்து கிளம்பி வந்த அகியும் கிருபாவும் அவன் அருகில் அமர்ந்தனர்...
மச்சான்... இன்னைக்கு இராமேஷ்வரம் பெரிய கோவில்க்கு போய்ட்டு அப்டியே ஈவினிங் கிளம்புறோம் டா.. வந்து 1 மன்த் ஆச்சு....
ம்ம் சரி டா.. கிளம்புங்க.. அடிக்கடி வந்துட்டு போங்க டா.. ஒரு வாரம் நீங்க இங்க வாங்க.. மறுவாரம் நானும் குட்டிமாவும் வாரோம்...
ம்ம் கண்டிப்பா டா..
அண்ணா குட்டிமா எங்க??இன்னும் தூங்குறா மா.. நான் போய் எழுப்பி கூட்டிட்டு வரேன்.. என்று அகியிடம் பதில் அளித்தவன் எழுந்து தன் அறைக்கு சென்றான்..
அங்கு குழந்தையாக தூங்கிக் கொண்டிருந்த தன் தேவதையின் அருகில் சென்றமர்ந்தவன்... அவளின் தலை கோதி... குட்டிமா எந்திரி தங்கம்... என்று மெல்ல அழைத்தான்..
அவளோ அசைவேனா என்று தூங்கிக் கொண்டிருந்தாள்...
ஹூம்.. என்று பெருமூச்சுவிட்டவன்.. அவளை தட்டி எழுப்பினான்...
அவனின் தட்டலில் லேசாக கண்ணை திறந்து பார்த்தவள்... புரண்டு அவன் மடியில் தலை வைத்து மீண்டும் நித்திரையை தொடர்ந்தாள்...