அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்... கீர்த்தி அர்ஜுனை விட்டு காத தூரம் ஓடினாள்... அவனை பார்க்கும் போது எல்லாம் அகியை ஒட்டிக் கொண்டு நின்றிருந்தாள்... அவளை பார்த்து அர்ஜுன் தான் தலையில் அடித்துக் கொண்டு... என்னடா உன்ன பார்த்து பேய்னு நினைச்சுட்டாளோ?? என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான்...சாமிக்கு பத்திரிக்கை வைத்து விட்டு சொந்த பந்தங்களுக்கு பத்திரிக்கை வைக்க ஆரம்பித்தனர்...
அனைத்தும் நல்லபடியாகவே நடந்தது.... அகி கிருபா விஷயத்தில்... ஆனால் அர்ஜுனோ தலையில் துண்டை போட்டு உட்காராதது ஒன்றுதான் குறை....
இராமேஷ்வரத்தில் திருமணம் என்றும் சென்னையில் வரவேற்பு என்றும் முடிவானது...
இன்னும் திருமணத்திற்கு இரண்டு நாளே இருந்தது.. அகியின் வீடே விழாக்கோலமாக காட்சியளித்தது...
கிருபா.. கிருபா...
என்னடா??
ஏன் டா இந்த காதல் வந்தால் என்னலாம் சைட் எபெக்ட்ஸ் இருக்கும்??
இப்படி கேட்ட அர்ஜுனை கிருபா தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்தான்... பார்த்துவிட்டு.... ஏன் டா அது என்ன நோயா?? சைட் எபெக்ட்ஸ் வர்றதுக்கு.. என்று தலையில் அடித்துக் கொண்டு திரும்பி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்....
சில நொடிகளில் பரபரப்புடன் அவனிடம் திரும்பி.. மச்சான்.. என்னடா?? யார் உன்ட மாட்டுனது?? சொல்லு டா.. நான் வேணா கெல்ப் பண்றேன்.. என்று கூறி கண்ணடித்தான்....
எல்லாம் உனக்கு தெரிஞ்சவதான்.. சொல்ல போனா உனக்கு ரொம்ப வேண்டியவதான்... நீயே கண்டுபிடி.. ஆனா அடிக்க கூடாது டா.. என்று கிருபாவை விட்டு இரண்டு அடி பின்னால் நகர்ந்தான் தன்னை காப்பாற்றிக் கொள்ள...
சிறிது நேரம் யோசித்த கிருபா.... ஏய் என்று கத்திக் கொண்டே அர்ஜுனை நோக்கி ஓடிவந்தான்.... அர்ஜுன் அவனிடம் இருந்து ஓடிக் கொண்டே... மச்சான் நம்ம என்ன அப்படியா பலகிருக்கோம்??? நான் உனக்கு மச்சான் தன டா?? பேசிக்கலி நான் நல்ல பையன் வேற... ஹிஹி அது உனக்கே தெரியும்...
யாரு நீ நல்ல பையன்... டேய் ஒழுங்கா என் கிட்ட வந்துரு... சிக்குன செத்த.... ஏன்டா கொஞ்சமாவது அறிவு இருக்கா??
ஏன் டா என் அறிவுக்கு என்ன டா குறைச்சல்?? என்று ஓடிக்கொண்டிருந்தவன் திரும்பி நின்று கிருபாவை முறைத்தான்....
அந்த நொடியில் அர்ஜுனை கைப்பற்றி இழுத்து பெட்டில் தள்ளி அவனின் வயிற்றில் ஏறி அமர்ந்து தர்ம அடி அடித்தான்....
சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துப் பிடித்து விளையாடி விட்டு... அப்படியே பெட்டில் சாய்ந்தனர்....
இருவரும் மல்லாக்க விட்டத்தை பார்த்தபடி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தனர்.... அர்ஜுன் கிருபாவை பார்த்து தரும்பி படுத்து அவனின் மேல் கையை போட்டுக் கொண்டு... அவன் முகம் பார்த்து கேட்டான்... மச்சான் உன் தங்கச்சிய எனக்கு குடு டா... நான் ராணி மாறி வச்சுக்குவேன்.... என்றான் உண்மையான காதலை கண்களில் தேக்கி....
உனக்கு இல்லாத உரிமை எவனுக்கும் கிடையாது டா.... உனக்கு தான் கீர்த்தி.... பட் நீ தான் அவட்ட பிரபோஸ் பண்ணனும்... அவ சரினு சொல்லிட்டா அடுத்த முகூர்த்தம் உனக்கு தான்... என்று அர்ஜுனை பார்த்து கண்ணடித்து சிரித்தான்....
கிருபா பதிலை கேட்ட அர்ஜுன் ஏக குஷியில் அவனை கட்டி அணைத்து கண்ணத்தில் முத்தமிட்டான்... அவன் நல்ல நேரம் அப்போது பார்த்தா கீர்த்தி கிருபாவை பார்க்க உள்ளே வர வேண்டும்... முத்தமிட்டதும் இல்லாமல்... கிருபா பார்த்து ஐ லவ் யூ டா.. ஐ லவ் யூ சோ மச்.. என்று கூறிக் கொண்டே திரும்பியவன் கீர்த்தியை சத்தியமாக அந்த இடத்தில் எதிர் பார்க்கவில்லை.... கீர்த்தியை பார்த்தவன் அவளின் திகைத்த தோற்றத்தை பார்த்தவிட்டு திரும்பி கிருபாவை பார்த்தான்.... அப்போது தான் தாங்கள் இருந்த நிலைமையை இருவருமே உணர்ந்தனர்....
கிருபா பெட்டில் படுத்திருக்க அவனை அணைத்தார் போல் அர்ஜுன் அருகில் படுத்து அவன் கண்ணத்தில் முத்தமிட்டு ஐ லவ் யூ சொன்னால்... கீர்த்தி அவர்களை பார்த்து என்ன நினைத்திருப்பாள்... என்று நினைத்தவர்களின் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல் ஆனது....
கீர்த்தி திகைத்த பார்த்தபடியே வெளியேறினாள்.... அர்ஜுன் தலையில் அடித்தபடி கிருபாவிடம் இருந்து தள்ளி படுத்தான்....
அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....