♥45♥

5.1K 159 36
                                    


தூக்கத்தில் புரண்டு கீழே விழுந்தாள் கீர்த்தி.... அர்ஜுனும் நல்ல தூக்கத்தில் இருந்ததால் அவன் கை தூக்கத்தில் கீர்த்தியை விட்டு விலகியிருந்தது.... அதனால் கீர்த்தி கீழே விழ.. அவள் விழுந்த சத்தத்தில் மூவரும் விழித்துக் கொண்டனர்....

கிருபாவும் அகியும்.. என்னாச்சு?? என்று பதறி எட்டி பார்க்க... அர்ஜுன் கையை விலக்கிக் கொண்டதற்காக தன்னையே நொந்துக் கொண்டான்... இவர்களின் சத்தத்தில் டிரைவர் காரை நிப்பாட்டி இருக்க... அவரிடம் திரும்பிய அர்ஜுன்... நீங்க வண்டிய கிளப்புங்கண்ணா.. ஒன்னும் இல்ல.. குட்டிமா தூக்கத்துல புரண்டுட்டா அதான்... நான் தூக்கிக்குறேன்.. என்று கூறினான்...

ம்ம் சரி தம்பி என்று மீண்டும் காரை ஓட்ட ஆரம்பித்தார் அவர்...

என்ன டா ஆச்சு?? அவள தூக்குடா... முழுச்சா அழ ஆரம்பிப்பா... என்றான் தூக்க கலக்கத்தில் இருந்து விடுபட்ட கிருபா...

ம்ம் நான் பாத்துக்குறேன் டா.. நீ தூங்கு... என்று அவனிடம் பதில் கூறிக் கொண்டே கீர்த்தியின் இடுப்பில் கையை கொடுத்து தூக்கி தன் மடியில் அமர்த்தி அவளின் தலையை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்....

கீழே விழுந்ததில் தூக்கத்திலேயே லேசாக சினுங்கிக் கொண்டிருந்தவள்.... அர்ஜுனின் தொடுதலில் முழிப்பு வந்து மேலும் சினுங்கினாள்.... அத்தான் கை வலிக்குது.... அடி பட்டுடுச்சு.. என்று கண்ணை மூடியவாறே கூறிக் கொண்டு நெஞ்சில் சாய்ந்தவளின் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டு அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு... அவளின் கைகளை நீவிவிட்டான்.... ஒன்னுமில்ல டா... வலிக்காது தூங்கு... என்று முதுகை வருடினான்.... அவளும் அவன் மடியில் நன்றாக அமர்ந்து அவனின் நெஞ்சில் சாயந்து அவன் சட்டைக் காலரை பற்றுகோலாக ஒரு கையால் பிடித்தவள்... மறுகையால் அவன் இடுப்பை சுற்றிக் கொண்டு கால்களை நன்றாக சீட்டில் நீட்டி... விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்....

அவளின் செயலில் நெகிழ்ந்தவன் அவள் உச்சியில் முகம் வைத்து தன்னோடு சேர்த்து இருக்கிக் கொண்டான்.... அவள் அவன் காலரை பிடித்தது அவனுக்கு அகியை நியாபகப் படுத்தியது... அகியும் இப்படிதானே அம்மாவும் அப்பாவும் தங்களை விட்டு சென்றபோது அவனை கட்டிக் கொண்டு தூங்குவாள்... என்று நினைத்தவன் திரும்பி அகியை பார்க்க... அவள் கிருபாவின் தோலில் சாய்ந்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்..... அவன் அசைந்ததும் மீண்டும் சினுங்க ஆரம்பித்த கீர்த்தியை... ஷ் ஷ்.. ஒன்னும் இல்ல குட்டிமா.. தூங்கு என்று முதுகில் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்....

அகல்யாWhere stories live. Discover now