♥53♥

4.5K 147 37
                                    


கீர்த்திமா.. என்ன பண்ற?? காலேஜ்க்கு லேட் ஆச்சு பாரு.... சீக்கிரம் வாடா... உன்ன விட்டுட்டு நான் கிளம்பனும்...

ம்ம் இதோ வந்துட்டேன் அத்தான்.. இந்த செயின் மாட்டவே முடில பாருங்க... என்று கழுத்தில் செயினை மாட்டிக் கொண்டே அர்ஜுனின் அருகில் வந்தாள் கீர்த்தி...

அவளிடம் இருந்து செயினை கைப்பற்றியவன் அவளின் கழுத்தில் அணிவித்தான்.. பின் அவளை தன் புறம் திருப்பி நெற்றில் அழுந்த முத்தமிட்டு அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்...

காலேஜ் வாசலில் இறங்குவதற்கு முன்பு அவனின் கண்ணத்தில் முத்தமிட்டுவிட்டு பாய் சொல்லி இறங்கினாள்... இது இந்த இரண்டு வாரத்தில் வாடிக்கையான ஒன்று... வீட்டில் இருந்து கிளம்பும் போது அர்ஜுன் அவள் நெற்றியிலும் காலேஜில் இறங்கும் போது அவள் அவன் கண்ணத்திலும் முத்தமிட வேண்டும் என்று அர்ஜுன் அன்பு கட்டளை போட்டிருந்தான்.... இதுவே மாலையிலும் தொடரும்...

கீர்த்தி காலேஜ் சேர்ந்து ஒரு மாதம் ஆகி இருந்தது.... அவளுக்கென்று 10 பேர் கொண்ட கேன்ங்கே பிரண்டாக அமைந்தது... அதனால் கீர்த்தி மகிழ்ச்சியாக காலேஜ் சென்று வந்தாள்... இன்று அர்ஜுனிற்கு பாய் காட்டி அவன் சென்றதும் தங்கள் கேங் அமரும் மரம் நோக்கி சென்றாள்....

ஹாய் கீர்த்தி... என்று கோரசாக குரல்கள் வந்தன...

ஹாய்... என்று பளிச்சென்ற புன்னகையுடன் கையசைத்து அருகில் சென்றாள் அவள்...

ஹேய்.. என்ன பா?? எங்க கூட காலேஜ் பஸ்ல வரலாம் ல... இப்படி நீ மட்டும் டெய்லி தனியா வர்ற... என்று எப்போதும் போல் அன்றும் குறைபட்டுக் கொண்டாள் திவ்யா....

நான் தான் சொன்னேன்ல பா... அத்தான் அப்படி விட மாட்டாங்க.. என்றாள் புன்னகையுடன் கீர்த்தி...

என்னமோ போ.. என்று சலித்துக் கொண்டாள் அவள்...

சரி.. சரி விடு பா... நீ வா கீர்த்தி என்று அவளை அமர வைத்தாள் கபிதா...

அகல்யாWhere stories live. Discover now