மயங்கி தன் மேல் சாய்ந்து நின்ற அகியை தன் கைகளில் ஏந்தி சிக் ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைத்தான்.... அவளுக்கு ஒன்றும் இல்லை என்று அறிந்ததும் தான் அவளை விட்டு விலகினான்....மச்சி.. உண்மைய சொல்லு... அவ உன்ன பார்த்ததும்தன மயங்குனா?? நீ பேஸ்ஸ குலோஸ் அப்ல காட்டிருப்ப... என்று கிருபாவை கிண்டலடுத்துக் கொண்டிருந்தான் ராஜிவ்....
இருவரும் ஹாஸ்டலில் தங்கள் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்...
டேய் விளையாடாத.... நானே அவள் ஏன் திடீர்னு மயங்கி விழுந்தாள்னு குழப்பத்துல இருக்கேன்... நீ வேற கடுப்பேத்திக்கிட்டு.. என்றான் அவனை முறைத்தபடி...
சரி சரி.. விடு மச்சி... அந்த பொண்ண பத்தி டீடெய்ல்ஸ் கேட்டேல... என்றதும் தன்னவளை பற்றி அறிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் அவனை நோக்கி திரும்பி அமர்ந்தான்...
பேரு அகல்யா..
டேய் அதுதான் எனக்கு தெரியுமே... இத தான் நீ ஒரு வாரமா கண்டு பிடிச்சயா?? என்றவனை பார்த்து ராஜிவ் முறைத்தான்... முழுசா சொல்ல விடு என்று தொடர்ந்தான்...
அவ உங்க ஊரு தான்...அவளும் அவ தோழி சத்யாவும் சேர்ந்து இங்க ஜாயின் பண்ணிருக்காங்க... அவளுக்கு அண்ணன் மட்டும்தான்... அப்பா அம்மா இல்ல.. என்றதும் கிருபாவின் மனம் வருந்தியது... இவளும் தன்னை போல தான் என்று... இங்க வெளி ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள்... என்று முடித்தான் ராஜிவ்...
அவன் கூறி முடித்ததும்.. கிருபாவிற்கு தனிமை தேவைப்பட்டது.. எழுந்து வெளியே சென்றவன்... தான் வழக்கமாக உட்காரும் மரத்தடியில் அமர்ந்தான்...
அகிமா... உனக்கு அப்பா அம்மா இல்லயா?? நானும் உன்ன மாதிரி தான்... பட் உனக்கு அண்ணன் இருக்கார்...என் வீட்ல அத்தை... அவ்வளவுதான் வித்யாசம்... உன்னை பார்த்த முதல் நிமடத்தில் இருந்தே உன்னை என் உயிராக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.... இனிமேல் நான் தான் உனக்கு அப்பா அம்மாவாக இருந்து பார்த்துப்பேன்.. என்று தன் மனதோடு பேசிக் கொண்டிருந்தான் அவன்...