♥36♥

4.8K 145 31
                                    


                      கீர்த்தி கிருபாவை கிஷோராக நினைத்தாள்.... கிருபா பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான்.... கிஷோரின் இறுதி சடங்கிற்கு யாரையும் அழைக்கவில்லை... தந்தையும் மகளுமாக செய்தனர்... கிருபாவிற்கு பிளாஸ்ட்டிக் ஸர்ஜரி உடனே செய்ய வேண்டிய நிலமை ஏற்பட்டது... அவனின் நினைவும் இப்போ அப்போ என்று ஒரு சில நேரமே வந்து சென்றது... அப்போதும் அவன் அகியை மட்டுமே தேடினான்.. ஆனால் அவனுக்கு தான் யார் என்பது தெரியவில்லை...

                       அன்பழகனுக்கும் கீர்த்திக்கும் கிருபாவின் வீட்டிற்கு எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.. அவனை யார் என்றே முதலில் தெரியவில்லை... அது தெரிந்தாள் தானே தகவலை பற்றி யோசிக்க முடியும்... அதே போல் கிருபாவின் முகம் முழுவதும் சிதைந்திருந்தது அதனால் பேப்பரிலும் விளம்பரம் குடுக்க முடியாமல் போனது...

                 டாக்டர் அந்த பையனுக்கு சொந்த ஊர் எது சொந்த பந்தம் யார்னு எங்களுக்கு ரெியாது... என்ன பண்ணலாம்?? அவர்கள் இவரும் இறந்துவிட்டதாகதான் நினைப்பார்கள்... பாவம்.. என்று டாக்டரிடம் தன் மனவருத்தத்தை கூறிக் கொண்டிருந்தார் அன்பழகன்...
 
                  சார்... இப்ப அவருக்கு நியாபகம் படுத்த எதும் டிரை பண்ணோம்னா அது எதிர்மறையா வேலை செய்யவும் வாய்ப்பு இருக்கு... சோ இப்ப முதல்ல அவருக்கு பிளாஸ்ட் சர்ஜரி செஞ்சு குணப்படுத்துவோம்.. அதன் பிறகு அவருக்கு நியாபகம் வரும் போது வரட்டும்... வேற வழி இல்லை.. என்றார் மருத்துவர்...

                  அதுவே இருவருக்கும் சரியாக பட... கிருபாவிற்கு பிளாஸ்ட் சர்ஜரி செய்ய அனைத்தையும் ரெடி பண்ணினார்கள்...

                  டெல்லியில் இருந்து மருத்துவர் வரவழைக்கப் பட்டார்...

                 கீர்த்திக்கு கிஷோரை திரும்பவும் பார்க்க வேண்டும்... தன் அண்ணன் திரும்பவும் தன்னிடம் வர வேண்டும் என்று தோன்றியது... அதனால் கிஷோரின் முகத்தை கொண்டு வர முடியுமா என்று மருத்துவரிடம் கேட்க... அவர் சரி என்று ஒப்புக் கொண்டு கிருபாவின் முகத்தை கிஷோரின் முகமாக மாற்றினார்...

அகல்யாWhere stories live. Discover now