வெல்கம் போத் ஆப் யூ.. என்று விரிந்த புன்னகையுடன் வரவேற்றான் கிஷோர்...அகல்யாவும் அர்ஜுனும் கிஷோர் இன்டஸ்டிரிக்கு வந்திருந்தனர்....
அர்ஜுனிடம் கை குலுக்கியவன்... அகியை நோக்கி கை நீட்டினான்... அதை புன்னகையுடன் மறுத்து தன் கரம் குவித்தாள்...
கண்களில் வியப்புடன் அவனும் கை குவித்தான்.... அகிக்கே அவள் ஏன் இப்படி செய்தாள் என்று தெரியவில்லை... தன் தொழிலில் நிறைய ஆண்களை சந்திக்க நேர்ந்ததுண்டு ஆனால் இவள் இப்படி தயங்கியதில்லை... இவனிடம் மட்டும் ஏன் இந்த தயக்கம் என்ற நினைப்பு வர தான் செய்தது... ஆனாலும் அதை ஒதுக்கியவள்....இருவருடன் சேர்ந்து நடந்தாள்...
இருவரையும் தன் ஆபிஸ் ரூமிற்கு அழைத்து சென்றவன்... அங்குள்ள சேரில் அமர சொல்லி ஜுஸ் கொண்டு வர வைத்து இருவரையும் உபசரித்தான்...
வெல்... எங்க கம்பேனிய சுத்தி பார்க்க போலாமா??
சுயர்.. சயர்... என்றனர்
ம்ம் வாங்க.. என்று இருவரையும் அழைத்து சென்றான்...
அவனின் கம்பேனியை பற்றி நிறைய சொல்லிக் கொண்டே வந்தான்... பொழுது மிக வேகமாக போனது... ஆனால் அகியால் தான் அவனை பற்றி எதும் அறிய முடியவில்லை... எதும் ஹின்ட் கிடைக்காதா என்று அவள் மனம் வேண்டியது கிருபாவிடம்....
மதிய உணவை மூவரும் சேர்ந்து உண்டனர்.... அப்போது அர்ஜுனிற்கு ஒரு இம்பார்ட்டன்ட் கால் வர அவன் பேசிவிட்டு அகியிடம் திரும்பினான்....
குட்டி... நம்ம சேட் கம்பேனிக்கு வந்துருக்காரு போல.. நான் கிளம்பனும்.... நீ இங்க இரு... நான் ஈவினிங் வீட்டுக்கு போகம் போது கூட்டிட்டு போறேன் என்றான்....
ம்ம் சரிண்ணா.... என்றாள் அகி... அவளுக்கும் இங்கு இருந்து சில விஷயங்கள் சேகரித்த பிறகே கிளம்ப வேண்டும் என்ற முடிவுடன் அர்ஜுனை அனுப்பி வைத்தாள்....
அர்ஜுன் சென்ற சிறிது நேரத்தில் கிஷோர் அவளிடம்...
பாதி தான் சுத்தி பாத்துருக்கோம்... மீதிய பாத்துருவோமா மிஸஸ் அகல்யா...
ம்ம் பார்க்கலாம்... என்றபடி எழுந்தாள்....
அகல்யா முன் நடக்க.... கிஷோர் பின் சென்றான்... கதவின் அருகில் வரும் போது டைல்ஸ் வழுக்கி அகி தன் பேலன்ஸை இழந்தாள்.... கீழே விழ சென்றவளை கிஷோரின் கைகள் தன்னோடு சேர்த்து அனைத்தது.....
அகிக்கு கிஷோரின் தொடுகை மின்சாரம் தாக்கியது போல் இருந்தது.... கிருபா என்ற கூவலுடன் அவனின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.... கிஷோரின் கைகள் அவளை தன்னோடு சேர்த்து இன்னும் இறுக்கியது....
அகியின் வாயில் இருந்து கிருபா... கிருபா என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் வரவில்லை....
தன் சர்ட்டில் ஈரத்தை உணர்ந்தவன்... குட்டிமா.. ஷ்ஷ்ஷ்... நான் தான் டா.. வந்துட்டேன்ல... அழகூடாது.... இத்தன நாள் உன்ன பிரிஞ்சிருந்ததுக்கு சாரிடா... செல்லம்... என்று அவளின் முகத்தை நிமிர்த்தி முகம் முழுவதம் முத்த ஊர்வலம் நடத்தினான்... இறுதியாக இதழால் இதழ் பொருத்தினான்....
அந்த முத்தம் எவ்வளவு நேரம் நீடித்ததோ.... முதலில் சுயநினைவுக்கு வந்தது அகிதான்... அவனை விட்டு விலகியவள்.... அவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தாள்....
அவளின் பார்வையை எதிர் கொண்டவன் அவளை கைகளில் ஏந்தி அருகில் இருந்த ரூமிற்க்கு அழைத்து சென்றான்... அங்கு இருந்த சோபாவில் அமர்ந்து தன் மடியில் அவளை கிடத்தி... இந்த இரண்டு வருடங்களில் தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் அவளிடம் கூற தொடங்கினான்.....
அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....