மறுநாள் அதிகாலையில் கண்விழித்த அகி... தன் அண்ணனை தேடி சென்றாள்... அவனோ குட்டிமா நான் கடைக்கு கிளம்புறேன்... நீ இன்னைக்கு ரெஸ்ட்டு எடு... நாளைல இருந்து உன்னை கடைக்கு கூட்டிட்டு போறேன்... என் கூடவே இருக்களாம்.. சரியா.. என்று அவளை தலையாட்டுதலை பெற்றுவிட்டு அவளின் கண்ணத்தை தட்டிச் சென்றான்...அவன் சென்ற சிறிது நேரத்தில் அவளுக்கு போர் அடித்தது.... தன் கப்போர்டை இல்லாம் அடிக்கிவிட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்தாள்...
அப்போது அவளை தேடி பக்கத்து வீட்டு ஆண்ட்டி வந்தார்...
அகி.. எப்படி மா இருக்க??
நல்லா இருக்கேன் ஆண்ட்டி.. நீங்க எப்படி இருக்கேங்க?? அங்கிள் எப்படி இருக்காங்க??
நல்லா இருக்கோம் மா.. அர்ஜுன் இல்லயா??
இல்ல ஆண்ட்டி.. கடைக்கு கிளம்பிட்டாங்க...
ஓ.. சரிமா.. தம்பி வந்ததும் வீட்டுக்கு வர சொல்லு டா.. மறந்துராத... முக்கியமான விஷயம்..
ம்ம் சொல்றேன் ஆண்ட்டி... என்ட்ட வேணா சொல்லுங்க நான் அண்ணாட்ட சொல்லிறேன்...
இல்ல இல்ல வேணாம்... நீ தம்பிய வர சொல்லு.. என்றபடி விடை பெற்று சென்றார்...
அவர் அப்படி கூறிவிட்டு சென்றது அகிக்கு வித்யாசமாக பட்டது... அண்ணன்ட்ட பேசுற அளவுக்கு என்ன அப்படி முக்கியமான விஷயம்... அதும் தன்னிடம் மறைக்கும் அளவுக்கு... என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள்...
மாலை அர்ஜுனின் வரவுக்கு காத்திருந்த அகி.. அவன் வந்ததும் ஓடி சென்று அணைத்துக் கொண்டாள்....
என்ன குட்டிமா.. நல்லா தூங்குனயா??
எங்க தூங்க.. செம போர் அண்ணா வீட்ல.. நாளைக்கு நானும் உன் கூட வாரேன்...
ம்ம் சரி டா கண்டிப்பா...
அண்ணா பக்கத்து வீட்டு ஆண்ட்டி உன்ன தேடி வந்தாங்க.. என்றதும் அவன் முகம் கறுத்தது...
அதை ஒரே நொடியில் மாற்றியவன்.. என்ன டா சொன்னாங்க??
அவனின் முகமாற்றலை பார்த்துக் கொண்டிருந்தவள்... உன்ன அங்க வர சொன்னாங்க... சீக்கிரம் வர சொன்னாங்க.. என்றாள்...
அடுத்த நிமிடம்... குட்டி நீ உள்ள போ.. நான் வந்துரேன்.. என்று பக்கத்து வீட்டை நோக்கி சென்றான் அவன்...
அவனின் செயலை கண்டவளின் நெற்றியில் தன் அண்ணனை நினைத்து முடிச்சு விழுந்தது....
அப்படி என்ன பிரச்சனை?? என்று அவள் மனம் சிந்திக்க ஆரம்பித்தது...
ஆண்ட்டி... வர சொன்னேங்களாமே??
ம்ம் வாங்க தம்பி... அந்த பண விஷயம் தான்... நீங்க கேட்க சொன்னேங்கல... கேட்டேன்... இவ்ளோ பெரிய அமௌன்ட் குடுக்க முடியாதுனு சொல்லி்டாங்க பா... மன்னிச்சுடு... இனிமே நானும் ஒன்னும் பண்ண முடியாது... வேற வழி எதும் யோசிப்பா.. என்று அவனை வழியனுப்பிவைத்தார் அவர்...
அர்ஜுனிற்கு பூமி தட்டாமாலை சுற்றியது... எப்படி சமாளிப்பது?? கடையை எப்படி காப்பாற்றுவது... தெரிலயே?? என்று பல்வேறு சிந்தனைகளுடன் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்...
அவனிற்காக காத்திருந்த அகி... அவனின் முகத்தை பார்த்தே எதோ சரியில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள்...
அவனிடம் என்ன விஷயம் என்று கேட்க... இதற்கு மேல் அவனும் மறைக்க முடியாது என்ற முடிவுடன் அவளிடம் கூற ஆரம்பித்தான்...
அதாவது... அவர்கள் கம்பேனியின் பத்திரத்தை வைத்து பணம் வாங்கியதாகவும்.. அவன் திருப்பி தர முடியவில்லை என்றும்... ஆதலால் பணம் தந்தவர் இரண்டு நாளில் வாங்கிய பத்து லட்சத்தையும் திருப்பி கேட்பதாகவும் அப்படி இல்லை என்றாள் கடையை தன் பெயரில் மாற்றி விடுவதாகவும் கூறிவிட்டார்...
இதை கேட்ட அகி... தலை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்...
அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்...