ஹேய் குட்டிமா.. நம்ம பாப்பாவ பாரு டா... ஏன் அங்க போய் உக்காந்துருக்க?? இங்க வா.. என்று சற்று தள்ளி அமர்ந்திருந்த கீர்த்தியை அழைத்தான் அர்ஜுன்..அவளோ சுவரை வெறித்துக் கொண்டிருந்தாள்... அவளை திரும்பி பார்த்தவன்.. எதுவோ சிரியில்லை என்று தோன்ற... குழந்தையை எடுத்துக் கொண்டு அவள் அருகில் சென்றமர்ந்தான்... குட்டிமா?? என்றழைத்தான் மென்மையாக...
அருகில் அர்ஜுன் குரல் கேட்டு திடுக்கிட்டவள்.. அத்தான்.. அகிமா... அகிமா.. ஒன்னும் ஆகாதுல?? எனக்கு ரொம்ப பயமா இருக்கு... என்று அவன் தோளில் விம்மலுடன் சாய்ந்தாள்...
அப்போது தான் அதை உணர்ந்தான்.. அகியை ஹாஸ்பிட்டல் உள்ளே அழைத்து வந்ததில் இருந்து கீர்த்தி இதே இடத்தில் தான் அமர்ந்திருக்கிறாள்... மிகவும் பயந்திருக்கிறாள் என்று... ஒரு கையால் அவளின் தலை கோதியவன்.. குட்டிமா.. இங்க பாரு.. என் கையில என்னனு.. நம்ம பாப்பா டா.. அகிக்கு ஒன்னும் இல்ல.. குட்டி பாப்பா பொறந்துட்டா... இங்க பாரு.. என்று அவளின் தலையை உயர்த்தி குழந்தையை காண வைத்தான்....
அந்த பிஞ்சு குழந்தையை பார்த்தவளின் கண்கள் விரிந்தன... அத்தான் குட்டி பாப்பா.. என்று ஆசையாக குட்டி கையை பிடித்துக் கொண்டாள்... சிறிது நேரம் அப்படியே விளையாடியவள்.. அர்ஜுனிடம் திரும்பி அகிமாவ பார்க்கனும் அத்தான்.. என்றாள்...
அப்போது கிருபாவும் வெளியே வந்தான்... அர்ஜுனிடம் இருந்து குழந்தையை வாங்கியவன்.. வாங்கடா.. என்று முன் சென்றான்... அர்ஜுனும் கீர்த்தியும் பின் தொடர அகியின் அறைக்கு சென்றனர்...
அடுத்து வந்த நாட்களில் கிருபாவும் அர்ஜுனும் மாறி மாறி அகியுடன் இருக்க... கீர்த்தியை மட்டும் வீட்டில் விட்டனர்.... அன்று அர்ஜுன் அகியின் அருகில் அமர்ந்து தன் மறுமகளை மடியில் ஏந்தியிருந்தான்... அகி தற்செயலாக அர்ஜுனை திரும்பி பார்க்க.. திகைத்தாள்... அங்கு அர்ஜுன் கண்கள் கலங்க தன் மகளை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள் எழுந்து அவன் அருகில் சென்றாள்... என்ன அண்ணா??