கீர்த்தியின் அழுகையை உணர்ந்தவன் திகைத்து அவளை தன்னிடம் இருந்து பிரித்து விழி நோக்கினான்...குட்டிமா.. என்ன டா??
அத்தான்.. காலைல இருந்து எனக்கு பேசவே ஆள் இல்ல... பிரண்ட்ஸ் யாருமே இல்ல.. என்று மறுபடியும் உதட்டை பிதுக்கி அழகையை தொடர்ந்தாள்...
ஷ் ஷ் குட்டிமா... இன்னைக்கு தன முதல் நாள்... போக போக உனக்கு பிரண்ட்ஸ் கிடைப்பாங்க... இதுக்கா அழுவாங்க... வா நம்ம கடற்கரைக்கு போலாமா இப்ப??
கடற்கரை என்றதும் ஓ என்று சிரிப்புடன் தலையாட்டியவளை அழைத்துக் கொண்டு கடலுக்கு சென்றான்...
எப்போதும் போல் கடலில் கால் நனைய நின்றவளை... இப்படி வா குட்டி.. உட்காரலாம்.. என்று அழைத்து சென்று மணலில் அமர்த்தி தானும் அருகில் அமர்ந்தான்... அந்த ரம்யமான சூழ்நிலை அவனுக்கு மிகவும் பிடித்தது... கடற்கரையில் எப்போதுமே அவனுக்கு அமர பிடிக்கும்.. அதும் தன் தேவதையோடு எனும் போது சொல்லவா வேண்டும்... அவன் சிறகில்லாமல் வானில் பறந்தான்...
அவன் அமைதியாக அமர்ந்திருக்க... கீர்த்திக்கு போர் அடிக்க ஆரம்பித்தது.... கொஞ்ச நேரம் சுற்றி வேடிக்கை பார்த்தவள்... அப்படியே அவனின் மடி சாய்ந்து தூங்கி போனாள்.... குழந்தையாக தன் மடி சாய்ந்தவளை பார்த்தவனின் முகத்தில் மென்மை படர்ந்தது...
இவளை தன் வாழ்வில் அடைய என்ன தவம் செய்தேன்... இவளுக்கு நான் தகுதியானவனா?? இவளை கடைசிவரைக்கும் தாங்க கூடிய வரத்தை மட்டம் தா இறைவா... வேறு எதும் எனக்கு வேண்டாம்... என்று வேண்டியபடி அவளின் தலை கோதி அமைதியாக அவளின் குழந்தை முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான்....
சிறிது நேரத்தில் அவளுக்கு கடல் காற்று சேராமல் உடல் விறைக்க ஆரம்பிக்க... அவனை இன்னும் நெருக்கியவள்.. அவனோடு ஒண்டிப்போனாள்.... அவளிடம் அசைவை உணர்ந்தவன் அவளின் நிலை உணர்ந்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டு காரை நோக்கி சென்று முன் சீட்டில் அமர வைத்து தானும் டிரைவர் சீட்டில் அமர்ந்தான்...