என்ன????? என்று வீடே அதிர கத்தினான் அர்ஜுன்...அனைவரும் அர்ஜுன் அகியின் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தனர்....
கிருபா சுவரில் சாய்ந்து நின்று தன்னுடைய கடந்த இரண்டு வருட காலத்தை பற்றி கூறிக் கொண்டிருக்க...
அகியின் அருகில் அமர்ந்திருந்த கீர்த்தி அகியின் கை மட்டுமே தனக்கு பலம் என்ற நம்பிக்கையுடன் அவளின் கையை இறுக்கியபடி கண்களில் புதியவர்களை பார்த்து பயத்துடன் அமர்ந்திருந்தாள்....
அகியும் அவளின் நிலை அறிந்தவளாக அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கிருபாவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்...
அத்தை கிருபாவை அதிர்ந்த பார்வை பார்த்தார்...
அனைத்தையும் கூறி முடித்தவுடன் தான் அர்ஜுனின் கத்தல் எதிரொலித்தது...
எற்கனவே தான் கிருபாவை அவர்களிடம் இருந்து பிரித்ததால் எல்லோரும் தன்னிடம் கோபப் படுவார்கள்... தன்னை வெறுப்பார்கள என்று நடுங்கிக் கொண்டிருந்த கீர்த்தி.. அவனின் கத்தலில் அகியிடம் இன்னும் ஒண்டினாள்...
ஆனால் அடுத்த நிமிடமே அர்ஜுன் வேகமாக கிருபாவிடம் நெருங்கி அவனை இறுக்கிக் கொண்டான்...
இருவரம் கண்ணீர் மழையில் நனைந்தனர்...
கிருபாவின் முகம் பற்றி அவன் முகத்தை தடவியவனின் உதடுகள் கிருபா.. கிருபா என்று உச்சரித்தது....
கிருபா தான் டா.. உன் கிருபா தான்... இந்த இரண்டு வருஷத்துல ரொம்ப கஷ்ட பட்டுருக்கல??? தனியா அகி அத்தையையும் சமாளித்து கடையையும் பார்த்துக்குட்டு... பாவம் டா நீ... என்று அவனை இழுத்து அணைத்தான்...
ஆம்... அர்ஜுன் மிகவும் கஷ்டபட்டான் தான்... அகியையும் அத்தையையும் தேற்ற அர்ஜுன் இருக்க.. அவனை தேற்றதான் ஆள் இல்லாமல் போய்விட்டது.... கிருபாவின் இழப்பு அவனை மிகவும் பாதித்தது.... தங்கையின் கணவனாக இருந்தாலும் கிருபா அவனின் உற்ற தோழன் அல்லவா??? இரண்டு வருடம் அனுபவித்த வேதனை எல்லாம் கிருபாவின் தோலில் சாய்ந்து அழுததில் குறைந்தது...