ஹேய் குட்டிமா.. எந்திரி டா செல்லம்.. நம்ம தனுஷ்கோடி போனும்ல.. கிளம்பனும் டா... என்று தன் மடியில் கிடந்தவளை கெஞ்சிக் கொண்டிருந்தான் நம்ம அர்ஜுன்..அந்தோ பரிதாபம்.. அவள் எழுவேனா என்று அடம்பிடித்து அவன் மடியிலேயே திரும்பி படுத்தாள்... அவளும் எழுவில்லை.. அவனையும் விடவில்லை... கிருபாவும் அகியும் கிளம்பி இவர்களை காணாமல் அறைக்கு வந்த பின்னும் அவர்களின் குட்டி தேவதை துயிலில் தான் இருந்தாள்...
பின் மூவரும் அவளிடம் கெஞ்சி கொஞ்சி அவளை கிளப்பி புறப்பட்டனர்...
ராமேஷ்வரத்தில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் காரில் சென்றனர்.. அதன் பிறகு காரில் செல்ல முடியாது என்பதால் ஒரு ஜீப்பை அமர்த்தி மணலில் சென்றனர். கீர்த்திக்கு இந்த பயணம் தான் முதன்முறை எனவே ஆச்சரியமாக பார்த்தபடி வந்தாள்... அவளை தன் அணைப்பில் வைத்துக் கொண்ட அர்ஜுன்.. தனுஷ்கோடியை பற்றிய வரலாற்றை அவளுக்கு கூறியபடியே வந்தான்...
அவன் கூறியதை கேட்டவளின் கண்கள் கலங்கி அர்ஜுனின் தோள் சாய்ந்தவள்...
எத்தனை பேர் ஒரு இரவுல இறந்துருக்காங்க?? என்று அழுகுரலில் கேட்டவளை தன்னுள் புதைதுக் கொண்டவன்.. அவளின் தலை கோதி சமாதானம் படுத்தினான்...
அகிக்கோ தனுஷ்கோடிக்கு வந்தாளே மனது சொல்ல முடியாத ஒரு வலியை உணரும்... இன்றும் அதே போல் கிருபாவின் தோள் சாய்ந்து எதை எதையோ நினைக்க ஆரம்பித்தாள்.. கிருபாவிற்கு அவள் மனநிலை புரியும் என்பதால்... அவளிடம் தனக்கு தெரிந்த விஷயத்தையே சந்தேகம் கேட்டு அவளை திசை திருப்பினான்....
தனுஷ்கோடியை சென்று அடைந்தவர்கள்... கால் புதைய அந்த மணலில் நடந்தனர்... சிறிது நேரத்தில் தெளிந்த கீர்த்தி... அர்ஜுனிடம் இருந்து விலக ஓட ஆரம்பித்தாள்... அவளை துரத்தியபடியே அர்ஜுனும் ஓட ஆரம்பித்தான்...
அகியின் உடல்நிலையின் காரணமாக அவளை சற்று தள்ளி மணலில் போர்வை விரித்து அதில் அமர வைத்தவன் தானும் அருகில் அமர்ந்து அவளுக்கு ஜுஸை புகட்டினான்... பின் இருவரும் ஓடிக் கொண்டிருந்தவர்களை அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்...