அதை படித்தவனின் கண்கள் இரத்த நிறம் கொண்டன.... புயலாக வெளியே வந்து கவினின் இல்லம் நோக்கி சென்றான்....அங்கு கவினின் வீட்டில் ஒரே கூட்டமாக இருந்தது.... கூடவே வீடே அதிரும் அளவில் அழுகுரல்...அதை கேட்டவனின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது.... யாரக்கு என்ன?? என்ற கேள்வியே அவனுள் நின்றது.... விரைந்து உள்ளே சென்றான்... அங்கு கவின் சடலமாக வைக்கப் பட்டிருந்தான்.... பக்கத்தில் யாரோ பேசும் குரல் கேட்டு அதை கவனித்தான்....
என்னய்யா இப்படி ஆகிவிட்டது.... நேற்று வண்டில போகும் போது இப்படியா லாரி மோதி ஸ்பாட்லயே போக வேண்டும்... குடும்பத்துல ஒரே பையன்.... இப்படி அவன் விதி முடியனும்னு இருக்கு... யாரால மாத்தமுடியும்... என்றார் ஒருவர்...
ஆமாண்ணே... பாவம் அவன பெத்தவங்க.. பார்க்க முடில... என்றார் மற்றொருவர்...
கிருபாவிற்கு ஏனோ மனம் அமைதியானது.... கடவுளே அவனை தண்டித்துவிட்டதாக நினைத்து அந்த வீட்யை விட்டு வெளியேறினான்....
இப்போது அவன் மனதில் இருந்தது எல்லாம் அகிதான்... அவளை எப்படியாவது அந்த நிகழ்வில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும்...
மற்றவனின் கை அவள் உடம்பில் பட்டதற்கே எவ்வளவு துடித்திருக்கிறாள்... வெளி நாட்டில் எல்லாம் ஆண் பெண் வித்தியாசம் பாராமல் அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்... இவள் எவ்வளவு பவித்திரமானவள்.... தன்னிடம் ஏன் அவளால் சொல்ல முடியவில்லை... பாவம் எவ்வளவு கஷ்டபட்டிருப்பாள்.... இனிமேல் அவள் எதற்காகவும் வருந்த கூடாது... என்று நினைத்தபடியே வண்டியை மருத்துவமனை நோக்கி செலுத்தினான்....
மருத்துவமனை வந்தவன் நேராக அகியின் அறைக்கு சென்றான்...
அங்கு அகி பெட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.. அருகில் அர்ஜுன் அமர்ந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்....
அர்ஜுன்...
சொல்லு கிருபா...