ஹேய் கீர்த்தி.. நெக்ஸ்ட் என்ன பண்ண போற??தெரிலப்பா... என் அத்தான் தான் டிசைட் பண்ணனும்... அவங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை??
ம்ம் என்ஜாய் பா...
ஹேய் மனோஜ்... அத்தான் இன்னைக்கு உன்ன வீட்டுக்கு வர சொன்னாங்க.. இப்ப வந்தடுவாங்க சேர்ந்தே போலாம்...
ம்ம் சரி கீர்த்தி..
அன்று அவர்களுக்கு கடைசி எக்சாம் என்பதால் அனைவரிடம் பிரியாவிடை பெற்று மனோஜுடன் அர்ஜுனை நோக்கி சென்றாள் கீர்த்தி...
தன்னை நோக்கி ஓடி வந்தவளை அணைத்தவன் மனோஜை நோக்கி சிரித்து தலையசைத்தான்... இருவரையும் வீட்டிற்கு அழைத்து செல்லும் வழி எல்லாம் கீர்த்தி இன்று கல்லூரியில் நடந்ததை அர்ஜுனிடம் கூறிக் கொண்டே வர... மனோஜோ அவளை வாரிக் கொண்டே வந்தான்...
இன்னைக்கு எக்சாம் செமையா எழுதிருக்கேன் அத்தான்...
அய்யோ அண்ணா.. இவள நம்பாதேங்க.. பாதிலேயே தூங்கிட்டா.. அப்புறம் நான் தான் அவ மேலே பேனாவ தூக்கி போட்டு எழுப்பிவிட்டேன்...
டேய் நான் ரெஸ்ட் எடுத்தேன்... எழுதி எழுதி டயர்டாகிட்டேன் யூ நோ.. என்று பின் திரும்பி அவன் தலையில் கொட்டியவள்.... அர்ஜுனிடம் அத்தான் இவன நம்பாதேங்க.. என்று சிணுங்கினாள்....
இருவரின் லூட்டியை பார்த்தவன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பிக்க.. அவனை நெருங்கிய கீர்த்தி அவனின் தோளில் கடிக்க... அவன் ஆஆஆஆ என்ன கத்தினான்.. அதை பார்த்த மனோஜ்.. அப்பாடா நான் தப்பிச்சேன்.. என்ன கடி என்ன கடி.. அண்ணா எப்படிதான் சமாளிக்கிறேங்களோ இந்த கடி நாய...
யாருடா கடி நாயி.. இப்படியே ஜம்ப் பண்ணி பேக்ல வந்தேன் தப்பிக்க முடியாது சொல்லிட்டேன்.. என்று அவனை திரும்பி முறைக்க...
அய்யோ அண்ணா காப்பாத்துங்க... அவள இழுத்து பிடுச்சுக்கோங்க... என்று அலறிய நொடியில் வீடு வர.. கீர்த்தியிடம் இருந்து தப்பிக்க இறங்கி வீட்டினுள் ஓடினான்.. கீர்த்தி அவனை துரத்திக் கொண்டு ஓட... அர்ஜுன் புன்னகையுடன் படியேறினான்... மனோஜ் இந்த ஒரு வருடத்தில் அந்த வீட்டில் ஒரு ஆளாக ஆகி போனான்.. அகியும் அர்ஜுனும் அவனை தம்பியாகவே நினைத்தனர்.. கிருபாவோ அவனை உரிமையாக மாப்ள என்று அழைத்தான்...