♥29♥

5.3K 153 61
                                    


                 கிருபாவிற்காக காத்திருந்தவர்களின் செவியில் அந்த செய்தி இடியாக இரங்கியது.... கிருபா வந்த பிளைட் மலையில் மோதி தீப்பற்றியது... அதில் இருந்த யாரும் பிழைக்கவில்லை.... அதைக்கேட்ட அகி தன் நினைவை இழந்தாள்....

                  அடுத்த அவள் கண் திறந்த போது வீட்டில் இருந்தாள்.... அனைவரின் விழிகளும் அழுது அழுது வீங்கியிருந்தது.... தான் கேட்டது கனவாக இருக்க கூடாதா என்று எவ்வளவோ வேண்டினாள்... ஆனால் மற்றவரின் விழிகளே தான் கேட்டது உண்மை என்று பறைசாற்றியது....

               கிருபாாாஆஆஆஆஆஆ என்று பெருங்குரலெடுத்து அழுதாள்.... அவளின் அழுகை அனைவரையும் மறுபடியும் அழ வைத்தது....

              குட்டிமா... அய்யோ நான் என்ன செய்வேன்... இப்படி விட்டுட்டு போய்ட்டானே??? அவன் இல்லாம என் குட்டிமா என்ன செய்வா??? அய்யோ கடவுளே இது கனவா இருக்க கூடாதா??? என்று தலையில் அடித்து கதறினான் அர்ஜுன்...

              அண்ணாாாா என்ற கூவலுடன் அவனின் மடி சாய்ந்தாள் அகி...

              அவளை தன் மடியில் போட்டுக் கொண்டு கதறிய அர்ஜுனையும் அவனே கதி என்று கிடந்த அகியையும் பார்த்த அத்தை இரத்த கண்ணீர் வடித்தார்...

             ராஜிவ்வும் சத்யாவுமே நடந்ததை ஜீரனிக்க முடியாதவர்களாக கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தனர்...

             இதை அனைத்தையும் கிருபா சுவரில் சித்திரமாக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்....

             விதியை வெல்ல யாரால் முடியும்... அது யாரை எந்த நேரம் கொண்டு போகும் என்று எவரும் அறியார்... நம் காலம் முடிந்தாள் அனைவரும் ஒரு நாள் சென்று தான் ஆக வேண்டும்... இதை எவரும் மாற்ற முடியாது.... நம் உறவுகள் அனைவரையும் ஒரு நாள் இழந்துதான் ஆக வேண்டும்.... நமக்கு உயிர் குடுத்த அன்னை நம் இறுதி மூச்சு வரை நம்முடன் வருவதில்லை... நம் பிறப்பிற்கு காரணமான தந்தையும் கடைசி வரை நம்மை துன்பத்தில் இருந்து காப்பதில்லை.... தோல் சாய தோழனாக மற்றொரு தந்தையாக இருந்த அண்ணன் தம்பியும் ஒரு நாள் நம்மை விட்டு செல்வர்.... மடியேந்திய மற்றோரு தாயாக இருந்த அக்கா தங்கையும் நம்மை விட்டு செல்வர்.... நம் வாழ்வில் மாற்றம் ஒன்றே மாறாதது.... அதை வென்றவரும் யாரும் இல்லை... நம் வாழ்வில் ஒவ்வொரு பிரிவையும் தாங்க முடியாமல் கதறியிருப்போம்.... நானும் என் தந்தையின் பிரிவிற்கு கதறினேன்... துடித்தேன்... அவருடன் நானும் சென்றுவிட வேண்டும் என்று வேண்டினேன்... ஆனால் எதுவும் நடக்க வில்லை.... தந்தை இருந்த காலம் வரை வந்த சொந்தம் பந்தம் அனைத்தும் பறந்தோடியது.... அம்மாவும் நானும் மட்டும் வீட்டில்... தாங்க முடியாத நாட்கள்... அன்று முடிவெடுத்தேன்... அம்மா முன்னால் அழ கூடாது என்று... என் தந்தையை சடலமாக பார்த்தபோது அழுதவள் அதன் பிறகு இன்று வரை அம்மா முன்னால் நான் அழுதது இல்லை... அதை நான் பெறுமையாக உணர்கிறேன்.... உங்கள் வாழ்க்கையிலும் நான் இழந்ததை போல் நிறைய இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அதை தாண்டி வாருங்கள்... கஷ்டமாக தான் இருக்கும்... ஆனால் இதுவும் கடந்து போகும் என்பதை மனதில் நிருத்துங்கள்... எந்த துன்பமும் நம்மை செதுக்கவே... சிற்பியின் உளியை தாங்கியதால் தான் கல் சிலையாக உருவெடுத்தது.... ஒவ்வொரு துன்பமும் நம்மை செதுக்கவே.... நட்பு என் வாழ்வில் பசுமையை திருப்பி தந்தது.... நான் துக்கத்தில் உணவை வெறுத்த நாட்களில் என்னை மடி தாங்கி உணவூட்டியது என் நண்பர்கள்....நான் துயரத்துடன் கூண்டுக்குள் அடைந்துக் கொண்ட நாட்களில் என்னை வெளியே அழைத்து வந்தது என் நண்பர்கள்... நண்பர்கள் என் வாழ்வில் நீங்காத செல்வம்... நட்புடன் வாழ்க... வாழ்க்கை வாழ்வதற்கே... வாழ்க வளமுடன்...

           குட்டிமா கொஞ்சம் சாப்டு டா... ப்ளீஸ்... என்று கையில் தட்டை வைத்துக் கொண்டு அகியிடம் அர்ஜுன் கெஞ்சிக் கொண்டிருந்தான்....

          கிருபா நம்மை விட்டு பிரிந்து இரண்டு நாள் ஆகிவிட்டன... அகி தண்ணீர் கூட குடிக்கவில்லை இந்த இரண்டு நாட்களாக.... அர்ஜுன் எவ்வளவு முயன்றும் அவளை சாப்பிட வைக்க முடியவில்லை....

          இன்று ஒரு முடிவுடன் சோபாவில் அமர்ந்திருந்தவளின் அருகில் அமர்ந்து அவளை தன் புறம் திருப்பினான்... அகி.. இங்க பாரு... நீ சாப்டாதனால நானும் சாப்டல அத்தையும் சாப்டல... அவங்களுக்கு சுகர் இருக்குல... இப்டி தான் அவங்களையும் கஷ்டபடுத்த போறயா??? அவங்க பிள்ளை போய்டான்னு நினைச்சு அழுவாங்கலா?? இல்ல நீ இப்படி இருக்கயேனு நினைச்சு அழுவாங்களா?? சொல்லு?? என்றான்...

              அவன் வார்த்தைக்கு தான் எவ்வளவு சக்தி... அவனிடம் திரும்பியவள் வாயை திறந்தாள்.... அதில் சாமாதானம் அடைந்தவன் அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்....

           அகி.. கொஞ்சம் கொஞ்சமாக அதை மறக்க நினைத்தாள்... ஆனால் எங்கு பார்த்தாலும் அவனாகவே தெரிந்தான்..... ரூமிற்குள் செல்லவே பிடிக்காமல் ஹால் சோபாவில் படுத்தாள்.... கண் மூடினால் அவன் வந்து கண்களுக்குள் சிரித்தான்... அதை தாங்க முடியாமல் ஓவென கதறினாள்.... அர்ஜுன் ஓடி வந்து அவளை மடி தாங்கினான்.... அகியின் நிலைமையை பார்த்த அர்ஜுன் ஒரு முடிவுக்கு வந்தவனாக அத்தையை பார்க்க சென்றான்....

           அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....

அகல்யாWhere stories live. Discover now