அகியின் வீட்டிற்குள் நுழைந்த கிருபா அவள் அறைக்குள் சென்று எதும் லெட்டர் எழுதி வைத்திருக்கிறாளா?? என்று சோதித்தான்... அவள் பெட்டிற்கு அடியில் அது தென்பட்டது....அன்புள்ள அண்ணாவிற்கு,
உங்களை தனியாக விட்டு செல்வதற்கு என்னை மன்னிக்கவும்.... நீங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் உங்கள் தங்கை வாழ்க்கையில் நடந்து விட்டது அண்ணா.. அது என்னுடன் போகட்டும் அண்ணா... நான் அதை யாரிடமும் கூற விருப்பப்படவில்லை... நீங்கள் முதல் சந்தேகம் கிருபாவின் மேல் தான் கொள்வீர்கள்.... ஆனால் கிருபாவின் மேல் எந்த தவரும் இல்லை... நான் அவரை என் உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன் அண்ணா.... அதனால் தான் உங்கள் அனைவரையும் விட்டு செல்கிறேன்.. மொத்தமாக... அண்ணா என்னை பற்றி கவலை படாமல் நீங்கள் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணைவியை தேர்ந்தெடுங்கள்.... நீங்கள் அண்ணனாக இல்லாமல் அப்பாவாக இருந்தீர்கள்... அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் உங்களுக்கு மகளாக பிறப்பேன் அண்ணா... இது சத்தியம்... என் முடிவிற்கு காரணம் என் மனம் தான்... அது என்னை கொல்லாமல் கொல்கிறது அண்ணா... இனிமேல் நான் வாழ்ந்தால் அது கிருபாவிற்கு நான் செய்யும் துரோகம் அண்ணா... அதனால் செல்கிறேன்... இதோடு இன்னோரு கடிதத்தையும் வைத்துள்ளேன்... அதை என் கிருபாவிடம் ஒப்படைத்து விடுங்கள் அண்ணா....
இப்படிக்கு
உங்கள் மகளான தங்கை
அகல்யா...படித்து முடித்தவனின் கரம் நடுங்கியது.... கண்களில் நிற்காமல் கண்ணீர் வலிந்தது..... அடுத்து தனக்கான கடிதத்தை பிரித்தான்....
என் கிருபா,
நான் உங்களுக்கு தகுதியற்றவள்.... நீங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் என்னால் காரணத்தை கூற முடியவில்லை கிருபா.. என்னை மன்னித்துவிடுங்கள்.... நான் உங்களை காதலிக்கவே தகுதியற்றவள்... கிருபா... என்னை மறந்துவிடுங்கள்... புதிய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.... இது என் மேல் ஆனை.... உங்கள் அகியுடைய கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள்.... அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உங்கள் மனைவி என்ற பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும்....
செல்கிறேன் கிருபா...
உங்கள் அகி....