குட்டிமா... நீ அர்ஜுன கல்யாணம் பண்ணிக்குறயா?? என்றான் கிருபா...அவனின் கேள்வியில் திகைத்தவள்.. அவனை பார்த்த மிரள மிரள முழித்தாள்...
மாலை ஐந்து மணியை போல உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்று அழைத்து வந்து தோடத்தில் அமர்த்தி அந்த கேள்வியை கேட்டான் அவன்...
என்ன அண்ணா சொல்ற?? என்று திக்கியவளிடம்...
ம்ம் நீ அர்ஜுன கல்யாணம் பண்ணிக்கோ குட்டி.. அவன் உன்ன நல்லா பார்த்துப்பான்... ப்ளீஸ் டா.. நீதான் இப்ப அவனுக்கு ஆறுதலா இருக்கனும்... நானோ அகியோ இங்க இருக்க முடியாது.. சென்னைல நிறைய வேலை இருக்கு... ப்ளீஸ் டா..
நான்... எனக்கு... எனக்கு இப்ப எதும் வேணாம்ண்ணா... எனக்கு... எனக்கு கல்யாணம் வேணாம்.. நான் வேணா இங்க அத்தான் கூட இருக்கேன்... ஆனா கல்யாணம் வேண்டாம் என்று கூறியவளின் குரல் உடைந்தது....
ஹேய் குட்டி.. என்று அவளை இழுத்து மடியில் சாய்த்தவன்.. ஏன் இப்ப அழுற?? என்று கண்ணீரை துடைத்து தலையை வருடினான்... அப்போது அகியும் வந்து கீர்த்தியின் மறுபுறம் அமர... கிருபா மடியில் இருந்து தலையை உயர்த்தி அகியின் மடியில் சாய்ந்தாள் கீர்த்தி... கீர்த்தியின் காலை தன் மடியில் தாங்கிய கிருபா.. மெதுவாக கால் அமிக்கியபடி அவளிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்...
குட்டிமா... நீ அர்ஜுன கல்யாணம் பண்ணா தான் இங்க இருக்க முடியும்... உனக்கு அத்தான பிடிக்கும் தன??
அகியின் வயிற்றில் முகம் புதைத்தவளிடம் இருந்து... ம்ம் என்ற முனங்கலே வெளிவந்தது...
அதைக்கேட்ட இருவரின் உதடுகளும் புன்னகைக்க... கிருபா தொடர்ந்தான்... அப்புறம் என்ன டா?? நான் அத்தான்ட்ட பேசிட்டு என் பதில சொல்றேன் அண்ணா... என்றாள் அவள்...
ம்ம் ஓகே... நீ போய் பேசு.. ரூம்ல தான் இருக்கான்...
ம்ம்... என்று எழுந்து நேராக அர்ஜுனின் அறையை நோக்கி சென்றாள் அவள்...
கிருபா.. அண்ணா இப்ப இருக்குற நிலைமைல இதுக்கு ஒத்துப்பாங்கலா??