♥34♥

5.2K 147 27
                                    


                     யார் இவர்கள்??? ஏன் என்னை எங்கையோ அழைத்து செல்கிறார்கள்??? நான் எங்கே இருக்கிறேன்... அய்யோ ஏன் எனக்கு எதுமே தெரியவில்லை... நான் இவர்களுடன் போக கூடாது... நான் போக கூடாது... அய்யோ என்னை விடுங்கள்... என் அகி எனக்காக காத்திருப்பாள்.... நான் அவளிடம் செல்ல வேண்டும்.. என்னை விட்டுவிடுங்களேன் ப்ளீஸ்... அய்யோ என் கையை இவன் விட மாட்றானே.... நான் என்ன பண்ணுவேன்.. அகி என்னை காப்பாற்று... காப்பாற்று அகி... நீ இன்றி நான் இல்லையே... நீ எங்கே போனாய் அகி... அய்யோ சார் நான் உங்களுடன் வர மாட்டேன்... ப்ளீஸ் என்னை அகியிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்... அகியிடம் விட்டு விடுங்கள்... தீடீரென்று அனைவரும் மறைய.... ஒரே இருட்டாக இருக்கு... நான் எங்கு இருக்கிறேன்.... என்று தன் போக்கில் உளரியபடியே சிறிது சிறிதாக இந்த மண்ணுலகை விட்டு சென்று கொண்டிருந்தான் கிருபா... தன்னை அழைக்க எமன் வர அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன் தன் அகிக்காக...

               கிருபாவும் கிஷோரும் பிளைட்டில் இருந்து தள்ளப் பட்டார்கள்...  இருவரும் கைகளை பிடித்தபடியே கீழே விழ.... பல கிளைகள் மரங்களில் முட்டி மோதி தரையை தொட்டபோது கிஷோரின் நினைவு தப்பியிருந்தது.... கிருபா தன் சுயநினைவை இழந்து கொண்டிருந்தான்....

                   அவர்கள் இருவரும் அங்கு விழுந்ததை யாரும் அறிய வாப்பில்லை... அனைவருக்கும் தெரிந்த செய்தி ப்ளைட் மலையில் மோதி தீப்பற்றியது... யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என்பது தான்....

                  ஹேய் கமலி... அங்க எங்க போற??? இங்க வா?? என்று அழைத்தான் கமலியின் கணவன் ராசு...

                 மாமா.. இங்க பாருங்க இரண்டு பேர் விழுந்து கிடக்கிறார்கள்....

                எங்க புள்ள??? இரு வாரேன்... என்று கமலி இருந்த இடம் விரைந்தான் அவன்...

                ஏய் என்ன புள்ள இது??? என்று குப்பறக் கிடந்த இருவரையும் திருப்பினான் அவன்....

               இருவரின் முச்சும் பிரியும் நிலைமையில் இருந்ததை தன் கையை வைத்து பார்த்தவன்.... தன் மனைவியிடம் திரும்பி... ஏய் புள்ள ஓடி போய் யாரயாவது சீக்கிரம் கூட்டிட்டு வா.. மூச்சு இருக்கு காப்பாத்திடலாம்.... என்று அவசரப்படுத்தினான்.... தன் மாமனின் வார்த்தையை காதில் வாங்கியவள் தன் கிராமத்தை நோக்கி தலை தெரிக்க ஓடினாள்...

                 கமலி பத்தே நிமிடத்தில் நான்கைந்து பேருடன் வந்துவிட கிஷோரும் கிருபாவும் பூந்தென்றல் கிராமம் நோக்கி தூக்கி செல்லப்பட்டனர்..... கிஷோர் தன் இறுதி நிமிடங்களில் இருக்க கிருபா முகம் முழுவதும் கண்ணாடி குத்தியிருந்தது.... கிருபா தன் நினைவை மொத்தம் இழந்திருந்தான்.... கிஷோர் முனங்கிக் கொண்டிருந்தான்...

                 அவன் முகத்தில் தண்ணீர் தெளித்த ராசு... அவன் கண்ணம் தட்டி தண்ணீரை பருக வைத்தான்... மெதுவாக கண் விழித்த கிஷோர் அருகில் கிடந்த தன் நண்பனை பார்த்து கண்களில் கண்ணீருடன் தன்னை சுற்றி இருந்தவர்களையும் பார்த்துவிட்டு தன் தாங்கி பிடித்திருந்த ராசுவிடம் ஏ  ஏ  ஏகே பு பு பு புட்ஸ் செ செ செ சென்னை.... கி கி கிஷோர்... இ இ இவனை காப்ப்ப்ப்பாற்றுங்கள்..  என்று பொருப்பை ராசுவிடம் ஒப்படைத்துவிட்டு கிருபாவின் கையை பற்றியபடியே கண்மூடினான்.... பார்த்து சில நிமிடங்களே ஆனாலும் கிஷோரின் இறப்பு சுற்றி உள்ளவர்களை மிகவும் பாதித்தது... அவனின் நினைவில் சில மணித்துளிகளை கரைத்தவர்கள் அதன் பிறகே நினைவு வந்தவர்களாக கிருபாவின் பக்கம் பார்வையை திருப்பினர்...

                  அங்கிருந்த சிறிய மருத்துவமனையில் அவனை சேர்த்தவர்கள் கிஷோர் சொன்ன முகவரியை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் முழித்தனர்...  கிஷோரின் உடலை போஸ்ட் மார்ட்டம் அறைக்கு எடுத்த சென்றிருந்தனர்... அப்போது போஸ்ட் மார்ட்டம் அறையிலிருந்து ஒரு செவிலி வெளியே வந்து ராசுவின் கையில் கிஷோரின் உடைமைகளை கொடுத்தாள்...

                அதில் அவனின் பர்ஸ் இருக்க... அதில் வீட்டு முகவரி இருக்கிறதா என்று பார்த்தவனுக்கு ஏகே புட்ஸ் என்ற பெயருடன் கூடிய விசிட்டிங் கார்டு கிடைக்க.. அதில் இருந்த நம்பருக்கு தொடர்பு காெண்டான்..... அது கிஷோரின் கைப்பேசி எண் ஆதலால் தொடர்பில் இல்லை என்று வந்தது.... அதற்கு கீழே ஆபிஸ் நம்பர் என்று இருந்ததை தொடர்பு கொள்ள கடைசி ரிங்கில் ஒரு பெண் அழைப்பை ஏற்று ஹலோ.... என்றாள்...

              அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்...

               

அகல்யாWo Geschichten leben. Entdecke jetzt