♥28♥

7.5K 165 48
                                    


                     நேரம் ஆமை வேகத்தில் சென்றன அகிக்கு.... கிருபா ஊருக்கு சென்று இரண்டே நாட்கள்தான் சென்றிருந்தது.... அவனை மிகவும் தேடினாள்... நேரம் கிடைக்கும் போது எல்லாம் இவளிடம் பேசதான் செய்தான்... ஆனாலும் இவளுக்கு அவன் அருகில் இல்லாதது மிகவும் வேதனையாக இருந்தது.... இப்போதும் அவனை நினைத்தபடியே ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தாள்....

             அகி.. அகி... இங்க கொஞ்சம் வாயேன்... அகி.. என்று தன் ரூமில் இருந்து அழைத்தாள் அத்தை.... எவ்வளவு கூறியும் அசையாமல் இருந்த தன் தங்கையை அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த அர்ஜுன் உலுக்கினான்....

           அவனின் உலுக்களில் சுயநினைவிற்கு வந்தவள்.. அவனை பார்த்து பெக்கே.. பெக்கே... என்று முழித்தாள்....

          அதை பார்த்வன் தலையில் அடித்தபடி.. குட்டிமா.. அம்மா கூடுறாங்க போய் என்னனு கேளு டா.. என்று அவளை அனுப்பி வைத்தான்...

         அவள் தலை மறைந்ததும் தன் போனை எடுத்து கிருபாவிற்கு அழைத்தான்....

         ஏன்டா டேய்... சீக்கிரம் வாயேன்டா.. என்றான் அவன் அழைப்பை ஏற்றவுடன்...

          என்னடா.. நீயும் உன் தங்கச்சி போல என்னை தேடுர... நீ இந்த வயசுல உனக்கு வர போற பொண்டாட்டிய தேடனும் டா லூசே... என்றான் கிருபா குரலில் கேலியுடன்....

         டேய் கைல கிடைச்ச செத்த.... இங்க ஒருத்திக்கு எத பார்த்தாலும் நீயா தெரியுற.... நீ என்னடானா அங்க போய் உக்கார்ந்துட்டு என்னை கிண்டல் பண்ற... என்றான் பொய் கோபத்துடன்....

         ஹி..ஹி... சரி சரி விடு... அகி என்ன பண்றா??? என்று விசாரித்து விட்டு சிறிது நேரம் இருவரும் அரட்டை அடித்துவிட்டு போனை வைத்தனர்....

         இவன் வைத்த அடுத்த நிமிடம் அகியின் போன் ஒலித்தது....

         அம்மா நான் கொஞ்ச நேரத்தில் வரேன் என்று அத்தையிடம் கூறிவிட்டு வேகமாக தன் அறைக்கு ஓடினாள்...

        அழைப்பை ஏற்றவள் கிருபா.. என்றாள் குரல் கரகரக்க...

        குட்டிமா.. என்றவனின் குரலும் கரகரத்தது.... செருமிக்கொண்டு... என்ன டா பண்ற???

        ம்ம் ரூமல தான்.. உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்... எப்போ வருவேங்க???

        சீக்கிரம் வந்துடுவேன் டா... நானும் என் குட்டிமா நினைப்புல தான் இருக்கேன்... குட்டி ஒரு கிஸ் குடு டா...

         சீ.... போங்க கிருபா...

         என்ன டி போங்கனு சொல்லிட்ட... நான் வர வேணாமா??? என்றான் பொய்க் கோபத்துடன்...

         அய்யோ இல்ல கிருபா... சீக்கிரம் வாங்க.. என்றாள் ஏக்கமாக...

          கண்டிப்பாடா தங்கம்.. சரி இன்னைக்கு நல்லா தூங்குர மாறி ஒரு நல்ல கிஸ் தா... என்றான் தன் வேலையில் கவனமாய்...

         விட மாட்டேங்கலே... என்று போனில் முத்தம் வைத்தாள் அவள்...

         அகி.. திஸ் இஸ் பேட்.. இங்க வரைக்கும் வரவே இல்ல... முதல்ல நான் அங்க வந்ததும் உனக்கு எப்படி கிஸ் பண்றதுனு கிலாஸ் எடுக்கனும் என்றான் குறும்பாக....

          சீ... அய்யோ கிருபா...இதெல்லாமா கிலாஸ் எடுப்பாங்க... என்றாள் சினுங்கலாக....

         என்ன பண்றது என் பொண்டாட்டி சின்ன பிள்ளையா இருக்கா... நான் தான் சொல்லி தர வேண்டியிருக்கு.... என்று கலகலவென சிரித்தான்...

        அதே புன்னகையுடன் பேசிவிட்டு போனை மனசே இல்லாமல் இருவரும் வைத்தனர்.....

         இப்படியே அகிக்கும் கிருபாவிற்கு ஆமை வேகம் போல் சென்றன நாட்கள்... அவன் அவளிடம் பேசும் நேரமும் குறைந்தது.... இரு நாட்களிலும் நேர வித்யாசம் வேறு காரணமாக அமைந்தது.... கிருபாவின் குரலை கேட்காமல் அகிதான் திண்டாடிப் போனாள்.... அகியின் புன்னகையே நின்று போனது.... அர்ஜுனும் அத்தையும் எவ்வளவோ முயன்றும் அவளின் முகத்தில் சிரிப்பை பார்ப்பதே அரிதானது.... இப்படியே நாட்கள் செல்ல கிருபா திரும்பி வரும் நாளும் வந்தது....

              அகி துள்ளிக் குதித்துக் கொண்டு ஏற்போட்டிற்கு கிளம்பினாள்.... அவனுக்கு பிடித்த அவன் முதன்முதலில் அவன் வாங்கி குடத்த ரெட் கலர் சாரியை கட்டிக் கொண்டு இருந்தாள்... அவளும் அர்ஜுனும் ஏற்போட்டு வாசலில் இருந்தனர்... ஏற்போட்டே பரபரப்பாக இருந்தது.... சிறிது நேரம் பயணிகள் வரும் பாதையை பார்த்தபடியும் அர்ஜுன் முகத்தை பார்த்தபடியும் இருந்தாள்....

           ஆனால் அவள் எதிர்பார்ப்பை கிருபா பொய்யாக்குவான்... அவன் வரவே போறது இல்லை என்று பாவம் அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை....

            அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....

           
              

 

அகல்யாWhere stories live. Discover now