அகிமா பாப்பா என்ன பார்த்து சிரிக்குறா... பாருங்க.. என்று குதூகலித்தாள் கீர்த்தி...ஹேய் ஸ்ரீ குட்டி.. என்ன பண்றேங்க?? அத்தைய பாருங்க.... எவ்ளோ அழகுடா நீ... என்று குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தவளை அகி ரசித்துக் கொண்டிருந்தாள்...
அப்போது தான் வீட்டின் உள்ளே நுழைந்தனர் கிருபாவும் அர்ஜுனும்... டேய் அகி.. என்னால அங்கு வேலை செய்யவே முடிலடா.. நாள் புள்ளா நம்ம பேபிமா நினைப்பாவே இருக்கு... என்று சோகமாக அகியின் அருகில் அமர்ந்த கிருபா தன் பெண்ணை கையில் அள்ளிக் கொண்டான்... அவன் பேச்சில் அர்ஜுன் புன்னகை விரிய கீர்த்தியின் அருகில் அமர... அகியோ கிருபாவை முறைத்துக் கொண்டிருந்தாள்..
அவளின் முறைப்பிற்கு காரணம் தெரிந்தும் அலட்டிக் கொள்ளாமல் எழுந்து.. சரி என் பேபிமாவ நான் கொஞ்ச போறேன்.. டாடா.. என்று தன் அறை நோக்கி சென்றான்...
அவன் சென்றதும்.. கீர்த்தியிடம் திரும்பிய அர்ஜுன்.. குட்டிமா ஷாப்பிங் போனும்னு சொன்னேல.. வா கிளம்பலாம்.. என்று அகியிடம் விடை பெற்று அவளை அழைத்து சென்றான்.. இருவரும் சென்றதும் தன் அறை நோக்கி சென்றவள்.. அங்கே கிருபா தன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு கண்டுக்கொள்ளாமல் மாற்றுடையை எடுத்தக் கொண்டு மாலை குளியலுக்கு சென்றாள்...
அறையினுள் அவள் வரும் போதே அவளை கவனித்தவன்.. அவளின் கோபத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தான்... குளிக்க சென்றதும் குழந்தையை அதன் தொட்டிலில் கிடத்தியவன் பாத்ரூம் கதவின் அருகில் சென்று நின்று கொண்டான்...
அவனை தாளித்தபடியே குளித்து முடித்த அகி கதவை திறந்து வெளியே வரவும்... கிருபா பின்னிருந்து அவளை தன்னோடு அணைக்கவும் சரியாக இருந்தது... அவனிடம் இருந்து விடுபட போராடியவள்... முடியாமல் போக அவன் பக்கம் திரும்பி நின்று சரமாறியாக அடிக்க ஆரம்பித்தாள்...
ஹே அகி செல்லம்... அத்தான் பாவம் டா... தங்கம் ல....
யாரு?? நீயா பாவம்?? போடா.. உன்ட நான் பேச மாட்டேன்... போயிரு... என்று அவனை அடித்தவள் ஒரு கட்டத்தில் அவன் நெஞ்சில் சாய்ந்தே அழ ஆரம்பிக்க... அவளை தன்னோட இறுக்கியவன் அவளின் உச்சியில் முத்தமிட்டு... டேய் நான் உன்னை தான் ரொம்ப மிஸ் பண்ணேன்.. இதெல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்குலாமா?? இங்க பாரு... என்ன பாரு... எனக்கு நீதான் பர்ஸ்ட் அப்புறம் தான் ஸ்ரீ குட்டி... சரியா.. என்று அவளை கைகளில் ஏந்தியவன் சோபாவில் அமர்ந்து அவளை மடியில் கிடத்தியவன்.. அவளின் முடி கோதினான்...