ஹே அகி... நீ போய்ட்டே இரு... நான் கடலை வாங்கிட்டு வரேன்... நம்ம பேவரேட் பிலேஸ்க்கு போ.. வந்துரேன்... என்று தன்னுடன் வந்த அகியை முன்னே அனுப்பிவிட்டு... கிருபாவிற்கு தகவல் தந்தாள்....அவள் அழைத்த உடன் வந்து நின்றான் அவன்... அவனையும் அனுப்பிவிட்டு கோவிலுக்குள் சென்று மறைந்தாள்...
கிருபாவிற்கு தூரத்திலேயே அகியை அடையாளம் தெரிந்தது.... அருகில் நெருங்கி அவள் அருகில் அமர்ந்தான்...
தன் வாழ்வை நினைத்து கடலை வெறித்துக் கொண்டிருந்த அகி பக்கத்தில் யாரோ அமர்வதை உணர்ந்து சத்யா என்று நினைத்து திரும்பினாள்.... ஆனால் அவள் கிருபாவை அங்கு எதிர் பார்க்கவில்லை என்பது அவளின் பயந்த பார்வையிலேயே தெரிந்தது.... ஒரு நொடி தான்.... அடுத்த நொடி பயந்த பார்வை இறுகியது..... கண்ணில் கோவத்துடன் அவனை பார்த்தாள்....
வந்த நொடியில் இருந்து அவள் முகத்தையே பார்த்திருந்தவன் அவளின் பயத்தில் குழம்பினான் பிறகு கோவத்தை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான்....
அகி...
கால் மீ அகல்யா... நான்தான் நேத்தே சொல்லிட்டேனே... அப்புறம் ஏன் சார் டிஸ்டர்ப் பண்றேங்க?? லீவ் மீ அன்ட் கெட் லாஸ்ட்.. என்றாள் கண்களில் சினத்துடன்
அகி.. என்ன ஆச்சு??? ஏன் இப்படி பிஹேவ் பண்ற??? நான் எதும் உன்ன கஷ்டபடுத்திடேனா???
நீங்க யாரு சார் என்ன கஷ்டபடுத்த?? எனக்கு உங்கள பார்க்கவே பிடிக்கல... நான் உங்கள லவ் பண்ணவே இல்ல... சும்ம டைம் பாஸ்க்கு தான் பழகுனேன்... என்று அவள் கூறி முடித்த நொடி அவன் கரம் இடியாக அவள் கண்ணத்தில் இறங்கியது.....
என்ன டி விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க?? நீ டைம் பாஸக்கு பழகுற அளவுக்கு நான் தரம் இறங்கி போய்ட்டேனா?? எனக்கு என்ன டி குறை?? உன் மேல உயிரையே வச்சுருக்கேன் டி... ஏன் டி இப்படி பண்ற??? உனக்கு என்ன தான் பிரச்சனை.... சொல்லு நான் பார்த்துக்குறேன்.... சேர்ந்து பேஸ் பண்ணலாம்.....
உங்களயே பிடிக்கலனு சொல்றேன்.. இதுல இது வேறயா... உங்களுக்கு தெரியனும் அவ்ளோ தன...கேட்டுக்கோங்க எனக்கு உங்கள விட நல்ல பணக்கார மாப்பிளையா வேணும்.... நீங்க வேணாம்.... ஐ டோன்ட் வான்ட் யூ... என்று கத்திவிட்டு எழுந்து சென்று விட்டாள்...
கிருபா ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டான்... இன்னும் அவனாள் நம்பத்தான் முடியவில்லை.. தன் அகி பொய்த்து போனதை..... தன்னை பார்த்து என்ன கூறிவிட்டாள்... அவனை யாரோ திக்கு தெரியாத காட்டில் விட்டது போல் இருந்தது....
அவனுக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தலையை கையில் தாங்கியபடி இருட்டும் வரை அமர்ந்திருந்தான்... பிறகு வேறு வழி இல்லாமல் வீட்டை நோக்கி சென்றான்...
இரவு உணவோடு தனக்காக காத்திருந்த அத்தையிடம் மறுத்திவிட்டு தன் அறைக்கு சென்றவன் உடை கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தான்..... துக்கம் தொண்டையை அடைத்தது.... கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.... தலையனையில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழுதான்... தேற்ற ஆள் இல்லாமல் விதியை நொந்தபடி அழுதான்... விடியும் வரை அழுதான்.... பின் ஒரு முடிவெடுத்தவனாக வேகமாக தயாராகி தன் அத்தையை காண சென்றான்....
அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....