அடுத்த நாள் அழகாக விடிந்தது... கண்விழித்த அகிக்கு உலகம் அழகாக தெரிந்தது..... அருகில் தன்னை அணைத்தபடி படுத்திருந்த தன் கணவனை திரும்பி பார்த்தாள்... கிருபாவின் முகத்தில் மென்னகையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்....எழுந்த செல்ல முயன்ற அகியை கிருபாவின் கை பிடித்து இழுத்து தன் மேல் விழ வைத்து.... கிருபா... என்ன பண்றேங்க... விடுங்க நான் குளிக்கனும்.... என்று சிணுங்கியபடியே அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.... ஆனால் அவளால் விடுபடதான் முடியவில்லை.... அவளை தன் அழைப்பிற்கு இழுத்த கிருபா அவளை தன் கைகளாலும் உதட்டாலும் செயல் இழக்க வைத்தான்....
அதன் பிறகு அவர்கள் இருவரும் தங்கள் உலகில் இருந்த வெளிவந்த குளித்து கிளம்பி வர வெகு நேரம் ஆனது....
பத்து மணி போல் இறங்கி வந்த இருவரையும் பார்த்த அர்ஜுன் மற்றும் அத்தையின் முகத்தில் கனிவு தெரிந்தது....
கிருபாவுடன் சேர்ந்து இறங்கி வந்து கொண்டிருந்த அகி தன் அண்ணனை பார்த்ததும்... அண்ணா என்ற அழைப்புடன் ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டாள்....
அர்ஜுனிற்கு அது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.... தன் மார்ப்பில் சாய்ந்திருந்த தங்கையை தன்னுடன் இறுக்கிக் கொண்டு கண்களில் கண்ணீருடன் கிருபாவை நிமிர்ந்து பார்த்தான்.... அவனும் அந்த சந்தோஷத்தை தன் அத்தையை கட்டிக் கொண்டு கொண்டாடினான்.....
கண்ணம்மா... அண்ணானு கூப்டு டா... இன்னோருக்க கூப்டு டா...
அண்ணா... அண்ணா.... அண்ணா..... அண்ணாாாா என்று அவன் காதில் கத்தினாள் அவள்...
அட என் செல்லமே என்று அவளை அணைத்தார் அத்தை.... போன சந்தோஷம் மொத்தமாக அந்த குடும்பத்தில் திரும்பி வந்தது.....
அகி... அகி.... என்ன பண்ணிட்டு இருக்க... மேல வா... என்று தன் ரூமில் இருந்த கிருபா அகியை கூவிக்கொண்டிருந்தான்....
அகிமா... நீ மேல போ டா... கொஞ்ச நேரத்துல அவன் போடுர சத்தத்துல இந்த வீடே விழுந்துரும்....
என்றான் அர்ஜுன் சிரிப்புடன்....
அகி வெட்க்கத்துடன் தலையில் அடித்தபடி தன் ரூமிற்குள் சென்றாள்....கிருபா.. என்றாள் உள்ளே நுழைந்தபடி... பின்னிருந்து கதவை மூடிவிட்டு அவளை அணைத்தவன் தன் சூடான உதட்டை அவளின் பின்கழுத்தில் பதித்தான்....
கிருபா... சும்மா இருங்க... என்ன இது... இப்பதான் மதியம் சாப்ட்டு மேல வந்தீங்க... ப்ளீஸ் விடுங்க... அண்ணா என்ன நினைப்பாங்க... எனக்கு வெட்கமா இருக்கு.... என்று சிணுங்கினாள்.... அவளை தன் முகம் பார்க்க திருப்பி அவள் முகம் நோக்கி குனிந்தான்.... சில நேரம் அவளை சிவக்க வைத்தவன்.... பின் அகி உன்ட கொஞ்ச நேரம் பேசனும் வா.. என்று அவளை அழைத்து சென்று சோபாவில் அமர்ந்து அவளை தன் மடியில் அமர்த்தி அன்று தான் அவள் டைரியை படித்தது முதல் கவின் எதிர்பாரா மரணம் வரை அணைத்தையும் கூறி முடித்தவன் தன் அணைப்பை இறுக்கினான்.....அந்த மௌனத்தை இருவருமே ரசித்தனர்... கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் அவளை தன் முகத்தை பார்த்து திருப்பி எவ்வளவு ஆழமா என்ன நேசுச்சுருக்க குட்டிமா... இந்த நேசத்திற்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.... என்றான் கண்களில் நீர் நிறைந்தவாரு.... அவனின் கண்ணீரை துடைத்தவள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.... நான் உயிரோடு இருக்கும் வரை உன்னை இனிமேல் கண்களங்க விட மாட்டேன் டா குட்டிமா.. என்றான் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு.....
அகியின் வாழ்க்கை பயணம் தொடரும்....