♥38♥

5.1K 144 39
                                    


கிருபா கூறி முடித்ததை கேட்டவளின் உதடுகள் கிருபாவின் முகம் முழுவதும் ஒரு வேட்கையோடு வலம் வந்து அதன் இணையோடு சேர்ந்தது... கிருபா அவளை தடுக்கவில்லை... இரண்டு வருடங்களாக அனுபவித்த துன்பத்தை எல்லாம் ஒரே இதழணைப்பில் அவனுக்கு உணர்த்தினாள் அவள்.... கிருபா அவளின் துன்பத்திற்கு தன் இதழை பரிசளித்தான்.... அவளின் அணைப்பில் அடங்கினான்.... அவளாக அவனை விடுவிக்கும் வரை அவளின் அணைப்பில் மூச்சில் கலந்தான்.... அகி மூச்சிற்காக அவனை விடுவித்தாள்.... அப்போதும் அவளின் கைகள் அவனின் கழுத்தை வளைத்திருந்தது.... எங்கு தான் கையை விளக்கிக் கொண்டாள் எல்லாம் கனவாகி விடுமோ என்ற பயத்துடன் அவனை அணைத்திருந்தாள்.... அவளின் எண்ணம் அறிந்தவனாக அவனும் அவளை விட்டு விலகவில்லை...

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ.... முதலில் அகி தான் சுய நினைவிற்கு வந்தாள்...

கிருபா.. நான் கீர்த்திய பார்க்கனும்... என்ன அவட்ட கூட்டிட்டு போங்க....

ம்ம் போகலாம் டா.. இப்ப என்ன அவசரம்... இன்னும் கொஞ்ச நேரம்... இப்படியே இரேன்... என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்....

உறுதியுடன் அவனின் கையை விலக்கியவள்... அவனின் மடியில் இருந்து இறங்கி அருகில் அமர்ந்தாள்... கிருபா.... நீங்க என்னோட கிருபாவா இருக்கலாம்... ஆனா இந்த உலகத்தை பொருத்த வரைக்கும் நீங்க கிஷோர்... சோ இந்த அறையை விட்டு வெளில போனா நம்ம டிஸ்டன்ஸ் மெய்ன்ட்டெய்ன் பண்ணிதான் ஆகனும்...

நம்ம தனி மனுஷங்க கிடையாது... அம்மா அண்ணா கீர்த்தி மூனுபேரும் இருக்காங்க... அவங்கட்ட கலந்து பேசனும்.... நிறைய வேலை இருக்கு.... கிளம்புங்க... முதல்ல கீர்த்திய பார்த்து அவளையும் கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு போகலாம்... அம்மா அர்ஜுன்ட்ட முதல்ல விஷயத்தை சொல்லலாம்... என்று கூறியபடியே எழுந்தாள்.... அவளின் கூற்றில் இருந்த உண்மை அவனை அவளை பின் தொடர செய்தது....

முதலில் கிஷோர் வீட்டிற்கு செல்ல.. அவர்கள் இருவரையும் வரவேற்றது ஹாலில் சுருன்டு படுத்திருந்த கீர்த்தியே... அவளை பார்த்தவன் திகைத்து கீர்த்தி என்று கூவலுடன் ஓடினான்.... அவனின் குரலை கேட்டவள்... அது வரை எங்கு அவன் வரவே மாட்டானோ.. நாம் ஆனாதை ஆகி விடுவோமோ என்ற பயம் விலக அவனிடம் தாவி கழுத்தை கட்டிக் கொண்டாள்... அண்ணா... அண்ணா என்று விசும்பலுடன் அவனுள் புதைந்தாள்.... கிருபாவும் தன் தங்கையின் துயர் தாங்காமல் தன்னுள் அவளை புதைத்தான்...

அவளின் நிலை அகிக்கு தெளிவாக புரிந்தது.... தன் கணவனின் கைகளில் குழந்தையாக கிடந்தவளின் அருகில் சென்றவள் அவளின் முடி கோதினாள்....

அதுவரை அகியை பார்க்காதவள் அகியை நோக்கி தன் பார்வையை திருப்பினாள்....

நீங்க... நீங்க... அண்ணாவ என்ட்ட இருந்து பிரிச்சுற மாட்டேங்களே??? என்றாள் அழுகையுடன்...

கண்களில் கண்ணீருடன் அகியின் தலை இல்லை என்று ஆடியது... அதிலும் தெளிவடையாமல் கிருபாவை நிமிர்ந்து பார்த்தது அந்த வளர்ந்த குழந்தை....

அவளை தன்னிடம் இருந்து பிரித்து அகியின் கைகளில் ஒப்படைத்தான்.... அகி கீர்த்தியை அணைத்தபடியே அழைத்து சென்று சோபாவில் அமர்த்தி... ஒரு பக்கம் தான் அமர.. கீர்த்தியின் மறுபக்கம் கிருபாவை கை பிடித்து அமர வைத்தாள்....

கீர்த்தியின் முகம் நிமிர்த்தி அவளின் கண்ணீரை துடைத்தவள்... ஒரு முடிவுடன் அவளின் முகம் நோக்கி இவர் உனக்கு யாரு டா???

அண்ணா... என்றாள் அவள்....

அண்ணா மட்டும் தானா?? அப்பா இல்லையா???

எல்லாமும் தான்... என்றாள் கீர்த்தி கண்களில் கண்ணீருடன்...

நான் யார்???

அண்ணி...

ம்ம் அண்ணி... இன்னொரு அம்மா தன???

ம்ம் என்று கீர்த்தியின் தலை ஆமாம் என்று அசைத்தது...

எந்த அம்மா அப்பாவை மகள்ட்ட இருந்து பிரிப்பாள் சொல்லு???

அவளின் பதிலை கேட்டவள் அகியின் நெஞ்சில் முகம் புதைத்து... அம்மா... அம்மா என்று கதறினாள்... பிறந்த அன்றே தன் தாயை இழந்திருந்தவள்... அம்மா என்று கூப்பிட யாருமே இல்லாமல் அண்ணாவின் அணைப்பில் வளர்ந்தவள் அகியை அம்மாவாக பார்த்தாள்....

அகியின் கை கீர்த்தி தன்னோடு சேர்ந்து இறுக்கிக் கொண்டது... நான் உனக்கு அம்மா டா... உன் மக எப்பயும் அழ கூடாது... கண்ண தொட... அழாத டா என்றவளும் சேர்ந்து கீர்த்தியுடன் அழுதாள்....

இவர்களின் பாசப் போராட்டத்தை பார்த்தவனின் கண்களும் கலங்க இருவரையும் இழுத்து தன்மேல் போட்டு கட்டிக் கொண்டான்....

அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்...

அகல்யாHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin