விஜய் தன் வீர வசனத்தை கூறிக் கொண்டிருக்க.. பாவம் அதை கேட்க தான் அங்கு ஒருத்தரும் இல்லை...அர்ஜுன் ஊசி போட்ட இடத்தை தன் கைகளால் தடவிக் கொண்டிருந்தான்...
கீர்த்தியோ வலிக்குது என்று சிணுங்கிக் கொண்டே அர்ஜுனின் மார்பில் சாய்ந்தாள்...
அப்போது தான் இதை கவனித்த விஜய்... அடப்பாவீங்களா... ஒருத்தன் இவ்ளோ நேரம் டயலாக் பேசுனேனே?? இந்த கொடுமையை கேக்க ஆளே இல்லயா?? என்று சுற்றி முற்றி பார்வையை திருப்பினான்... அங்கு கதவை லேசாக திறந்து அகியும் கிருபாவும் தலையை மட்டும் உள்ளே நுழைத்து என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்க... விஜய் வயிற்றை பற்றிக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்....
இவன் எதுக்கு இப்ப லூசு மாதிரி சிரிக்கிறான்?? என்று நினைத்தபடி அர்ஜுனும் கீர்த்தியும் திரும்பி விஜயை பார்க்க... அவன் பார்வை சென்ற திசையில் திரும்பினார்கள்.... அங்கு அகியையம் கிருபாவையும் கண்ட அர்ஜுனும் சிரிக்க ஆரம்பிக்க... கீர்த்தி தன் நெற்றிக்கண்ணை திறந்தாள்....
கிருபாவும் அகியும் அசடு வழிந்தபடி உள்ளே நுலைய... கீர்த்தி முகத்தை திருப்பிக் கொண்டாள்...
அவள் அருகில் சென்றவர்கள்... ஸாரி டா குட்டி... அர்ஜென்ட் கால் வந்துச்சா அதான் போய்ட்டேன்... உனக்கு ஊசி போட வேண்டாம்னு சொன்னேனே இவன்ட்ட... போடலேல?? என்றான் கிருபா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு....
ம்ம்.. ஆமா ஆமா... நீ சொன்ன.. அவன் உடனே கேட்டுடான்.. போங்க டா.. இரண்டு பேர்ட்டயும் நான் பேச மாட்டேன்.... அகிமா யூ டூ புருட்டஸ்.. என்று அகியிடமும் அவள் பாய... அவளை ஒருவழியாக பேசி ஐஸ்கீரிம் வாங்கி தருவதாக சமாதானப்படுத்தி மருத்துவமனையில் இருந்து கிளம்பினர்..
வாடா.. நான் தூக்கிக்குறேன்.. நீ இந்த காலோட நடக்க வேண்டாம்.. என்று கீர்த்தியை கிருபா தூக்க வர...
டேய்.. நீ அடங்கவே மாட்டயா?? அவ என்ன சின்ன பிள்ளையா?? அதெல்லாம் நடப்பா.. நீ இப்படியே செல்லம் குடுத்துட்டு இரு.. போற வீட்லயும் அவ ஆள தூக்க சொல்ல போறா.... என்று விஜய் கீர்த்தியின் மேல் உள்ள உண்மையான அக்கரையில் கூற...