♥37♥

4.2K 151 34
                                    


                யார் அவள்??? ஏன் எனக்கு இப்படி வேர்க்கிறது??? அவளுக்கும் எனக்கும் ஜென்ம பந்தம் போல் தோன்றுகிறதே.... ஆண்டவா... நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்... அவள் யாரோ ஒருவனுடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறாள்... அவள் கணவனாக கூட இருக்கலாம்.... ஆனால் நான் தான் அவள் முகம் கூட பார்க்கவில்லையே... இருந்தும் ஏன் என்று தெரியவில்லையே... அவள் எனக்கு வேண்டும் என்று உள்உணர்வு கூறுகிறதே.... என்று நினைத்தபடி கிஷோர் அகி மற்றும் அர்ஜுன் அமர்ந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் அமர்ந்து அவர்களை பார்த்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான்....

                  அப்போது தான் அகியும் அர்ஜுனும் மேடை ஏறினர்... அகியின் முகத்தை பார்த்த அடுத்த நொடி... கிஷோர் கிருபாவாக மாறினான்... பழைய நினைவுகள் ஒன்றின் பின் ஒன்றாக மனதில் வலம் வந்தன.... அத்தையின் செல்ல மகனாக வளர்ந்தது... அகியை முதன் முதலாக பார்த்தது... உயிருக்கு உயிராக நேசித்தது... தன்னை விட்டு அவள் பிரிந்தது... அதன் பிறகு அவள் தற்கொலைக்கு முயன்றது.... தான் காப்பாற்றி தன் உயிரின் பாதியாக அவளை மாற்றியது... தங்கள் திருமணம்... அதன் பின்னான தங்கள் வாழ்க்கை.... அமேரிக்கா பயணம்... கிஷோரின் நட்பு... பிளைட் பயணம்... இறுதியாக விமானத்தில் இருந்து குதித்தது வரை நியாபகம் வந்தது... அதன் பிறகு தான் எப்படி கிஷோராக மாறினோம்... மண்டை காய்ந்தது.... இதை கீர்த்தியால் தான் விளக்க முடியும்.... இத்தனையும யோசித்தவனின் தலை விண்விண் என்று தெரித்தது.... எல்லாம் சில நொடிகள் தான்... மைக்கை அகியின் கையில் குடுக்க... அவள் கிருபாவை பற்றி பேசும் வரை தான்.... தன்னவளின் பேச்சை கேட்டவனின் கண்கள் கண்ணீரை பொழிந்தது... அடுத்ததாக அர்ஜுன் தன்னை எவ்வளவு மிஸ் பண்ணுகிறான்... என்று கேட்டவன் உதடுகள் தானாக ஐ லவ் யூ டா என்று முனுமுனுத்தது.... இரண்டு வருடங்கள் இவர்களை எவ்வளவு தவிக்க விட்டோம் என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டான்... அதன் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக தன்னை கிஷோராக மாற்றிக் கொண்டு அகி அர்ஜுனின் முன் நின்றான்...

அகல்யாWhere stories live. Discover now