♥14♥

5.2K 156 56
                                    


                    அடுத்த நாள் காலை பதினோரு மணியாகியும் அகி ஆபிஸ் வரவில்லை... கிருபா தன் ரூமில் நடைபயின்று கொண்டிருந்தான்...

                  அப்போது யாரோ கதவை தட்டினார்கள்..

                 எஸ்.. கம் இன்...

                 சார் உங்களை பார்க்க அர்ஜுன்னு ஒருத்தர் வந்துருக்காரு...

                வர சொல்லுங்க... அர்ஜுன் வருகையை அவன் எதிர்பார்த்தே இருந்ததால் அவனை பேஸ் பண்ண தயாராகவே இருந்தான்...

               உள்ளே நுழைந்த அர்ஜுனை வரவேற்று அமர வைத்தான்...

               சொல்லுங்க அர்ஜுன்..

               சார் அகல்யாவுக்கு உடம்பு முடில... அதனால் இனிமே வேலைக்கு வர முடியாது.... இது என்னோட கடைப்பத்திரம்... உங்கட்ட வாங்குன கடனுக்கு பதிலா வச்சுக்கோங்க... எனக்கு இந்த கடயை விட அகி முக்கியம்... அவ இனிமே இங்க வந்தா நான் அவள இழந்துடுவேன்னு புரிஞ்சுக்கிட்டேன்.... நேற்று என்ன நடந்ததுனு எனக்கு தெரியாது... ஆனா அதனால அவ ரொம்ப காய பட்ருக்கா... போதும் சார்.. எங்கள விட்ருங்க.. இப்பயும் இவ்ளோ பொறுமையா பேசுறேன்னா அதுக்கு காரணம் உங்கட்ட கை நீட்டி காசு வாங்கிட்டேன்... இனிமே உங்கட்ட கை கட்டி நிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல... கிளம்புறேன் என்று எழுந்து சென்றான் அவன்...

              இன்னும் அர்ஜுன் தந்த பத்திரத்துடன் பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான் கிருபா...

             அவள் ஏன் இப்படி செய்தாள்.... என்ற ஒரு கேள்வியே அவனின் மனதில் இருந்தது.... இதை தவிர அவளிடம் இருந்து எதை எதிர்பார்த்தாய் என்று அவனின் மனசாட்சி அவனை இடித்துரைத்தது....

            நெஞ்சு கனமாக அப்படியே தன் சேரில் பின்னால் சாய்ந்தமர்ந்தான்....
இதை இனிமேலும் தள்ளி போட கூடாது என்ற முடிவுடன் தன் வீட்டிற்கு சென்றான்...

            இந்த நேரத்தில் அத்தை அவனை எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் முகமே அவனுக்கு எடுத்துரைத்தது.....

           நேரே அவரிடம் சென்றவன் சோபாவில் படுத்து தன் தலையை அவரின் மடியில் சாய்த்தான்....

           அவனின் நடவடிக்கையால் திகைத்தவர் அவனின் முடிகோதினார்....

          என்னடா கண்ணா???

         அத்தை எனக்கு அகி வேணும்... நான் உங்கட்ட சொன்னேன்ல அகி... என் அகி அத்தை... காலேஜ் ல நான் லவ் பண்ண பொண்ணு அத்தை... அவள என்னால மறக்க முடில.... ரொம்ப கஷ்டமா இருக்கு... அவள நான் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன் அத்தை... எனக்கு அவ வேணும்.... தன் மடியில் படுத்து குழந்தையாய் அரற்றிய கிருபா அவருக்கு தாய் தந்தையை இழந்த புதிதில் தன் மடியில் அமர்ந்து கழுத்தை கட்டிக் கொண்டிருந்த சின்ன வயசு கிருபாவை நியாபகம் படுத்தினான்....

              கண்ணா.. என்னடா தங்கம்... அவள மறுபடியும் பார்த்தயா?? சொல்லு.. நான் போய் அவங்க வீட்ல பேசுறேன்.... என்றார் அவனை தட்டிக்கொடுத்து....

             ஆதிமுதல் அந்தமாக அனைத்தையும் கூறி முடித்தவன் அவ ஏன் என்ன விட்டு போனா அத்தை??? நான் என்ன பண்ணேன்??? ஒன்னுமே தெரிலயே... கெஞ்சுனேன் அத்தை அவ கேக்கல... கஷ்டமா இருக்கு.. அன்னைக்கு என்ன நடந்ததுனு என்ட சொல்வே மாட்றாலே.... என்று வருந்தினான்

               எல்லாத்தையும் கேட்டிருந்தவர் ஒரு முடிவுடன் அவனை எழுப்பினார்... கண்ணா... அவ வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போ... என்றார் முடிவாக...

               அவனும் வேறு வழியில்லாமல் அவரை அழைத்துச் சென்றான்...

               இருவரும் அகியின் வீட்டை அடைந்து காலிங் பெல்லை அடித்தனர்... ஆனால் சில நிமிடங்கள் சென்ற பிறகும் யாரும் வந்து கதவை திறக்கவில்லை.... லேசாக கதவை தட்டினான் அது திறந்துக் கொண்டது....

              இருவரும் உள்ளே நுழைந்து தாங்கள் கண்ட காட்சியில் உரைந்தனர்.... அப்படி என்ன நடந்தது... அடுத்த பகுதியில் சந்திப்போம்...

             அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....

             Hello everyone... sry drs ennala weekly twice than update panna mudiyudhu... adhum kutty update than... romba sry.. but i have many works to do.. time kidaikave maatenguthu... plz poruthukonga.. kutty kutty update ah pandren.. thanx for ur support.. keep supporting drs... without ur support i cant do anything...

அகல்யாWhere stories live. Discover now