♥31♥

4.4K 150 43
                                    


                      கிஷோர் அவ்விடத்தை விட்டு சென்ற பிறகு அர்ஜுன் அகியிடம் திரும்பி...

                     என்ன குட்டி.. அவனா வந்தான்... விஸிட்டிங் கார்டை குடுத்தான்... அவன் கம்பேனிக்கு வர சொல்லிட்டு போறான்... மற எதும் கலன்டுருச்சோ??

                     அவன் கேட்ட கேள்விக்கு அகியிடம் இருந்து பதில் வராததால் திரும்பி அவள் முகம் நோக்கினான்...

                    அங்கு அவள் கிஷோர் சென்ற திசையை திக்பிரம்மையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்....

                    அவளை படித்து உலுக்கியவன்... என்ன டா.?? என்றான் மென்மையாக...

                    அவனின் உலுக்கலில் சுயநினைவுக்கு வந்தவள்... ஹாங்.. என்று விளித்தபடி... ஒன்னும் இல்லை... வாங்க கிளம்பலாம் என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்....

                    அன்று இரவு தன்னறையில் கட்டிலில் சாய்ந்தவளின் நினைவு முழுவதும் கிஷோரையே சுற்றி வந்தது...

                   ஏன் அவன் தன் கண்களுக்கு கிருபாவாக தெரிந்தான்.... கிருபா இவன் மூலமாக தனக்கு எதும் செய்தி கூறுகிறாரோ??? அவன் கண்கள் ஏன் தனக்கு கிருபாவை நினைவு படுத்தியது.... மற்ற ஆண்களை பார்த்து இந்த மாதிரி தோன்றியதில்லையே.... அப்படி இவனிடம் ஏதோ இருக்கிறது.... இவனை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.. என்ற முடிவுடன் எழுந்து அமர்ந்தாள்....

                  தன் கைப்பையில் தேடியயவள் அவன் குடுத்த விசிட்டிங் கார்ட்டை எடுத்தாள்.... அதில் ஏ.கே புட்ஸ் என்று அச்சடிக்கப்பட்டு.. கான்டாக்ட் நம்பரும் சேர்மேன் என்று அவன் பெயரும் இருந்தது...

                  தன் லேப்டாப்பை ஓபன் செய்தவள்... கூகுலில் ஏ.கே புட்ஸ் என்று அடித்து அதன் அனைத்து செய்திகளையும் கலைக்ட் செய்தாள்....

                 அன்பழகன் என்றவர் தான் ஏ.கே புட்ஸின் உரிமையாளர்... கிஷோர் அவரின் ஒரே மகன்... கடந்த 30 வருடங்களாக ஏ.கே புட்ஸ் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது... கடந்த சில நாட்களாகதான் கிஷோர் அதில் பொருப்பேற்று திறமையாக நடத்தி வருகிறான்... அதுவரை அவன் எங்கு இருந்தான் என்பது கேள்விக்குறியே????

                அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவன் பெயரை கூகுளில் டைப் செய்தாள்... அந்த கம்பேனி சிறந்த முறையில் நடைபெற்றதாள் அவளால் ஈஸியாக அவனை பற்றி அறிய முடிந்தது...

               சிறு வயதில் இருந்து இங்கேயே படித்தவன் தன் மேற் படிப்பை அமேரிக்காவில் முடித்துவிட்டு இரண்டு வருடம் முன் கிருபா வந்த பிளைட்டில் தான் வருவதாக இருந்தது... ஆனால் அவன் வரவில்லை... இப்போது தான் தாய் நாட்டிற்கு திரும்பி இருக்கிறான்...என்ற செய்தியை அறிந்தவள் திக்பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்....

                 இதில் ஏதோ இருக்கிறது... ஏதோ கிருபா தன்னிடம் இவன் மூலமாக கூற விரும்புகிறான்...

                 இவனிடம் நம் நட்பை வளர்க்க வேண்டும்.. என்ற உந்துதல் ஏற்பட்டது அவளுக்கு.... அந்த முடிவுடன் தூங்கினாள்...

                 மறுநாள் காலை கிளம்பி டைனிங் ஹாலுக்கு வந்தவள்.. தன் அண்ணனிடம்... அண்ணா.. நேத்து கிஷோர் அவர் கம்பேனிக்கு விஸிட் பண்றதுக்கு வாய்ப்பு தந்தார்ல.. நம்ம போலாம் அண்ணா... நமக்கும் சில விஷயங்கள் தெரிய வரலாம்... ஏன் நாம கிடைச்ச வாய்ப்பை தவர விடனும்... நீங்க என்ன நினைக்குறேங்க???

              ம்ம் நானும் அதான் நினைச்சேன் குட்டி.. அவர்ட்ட காண்டாக்ட் பண்ணலாம்...என்றான் அவன்....

              அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....

              Hello guys... sry for the late update... innum 2 days ku i m busy.. so nxt update tuesday than.. konjam poruthukonga.. c u..
        

                

               

அகல்யாWhere stories live. Discover now