♥1♥

12.8K 175 4
                                    


                   ஹேய் அகி... சீக்கிரம் வா டி.. அண்ணா கால் பண்றாங்க..

                   ம்ம் இதோ வந்துட்டேன் சத்யா.. என்றபடி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள் நம் கதாநாயகி அகல்யா...

                   ஹலோ அண்ணா.... எப்படி இருக்கேங்க??

                    நான் நல்லா இருக்கேன் டா குட்டி... நீ எப்படி இருக்க??

                   ம்ம் நல்லா இருக்கேன் அண்ணா..

                  இன்னைக்கு எத்தன மணிக்கு கிளம்புற??

                   5க்கு கிளம்பிடுவேன் அண்ணா... கூப்ட வந்துருங்க...

                   ம்ம் கண்டிடா டா குட்டி... சரி இன்னைக்கு எக்சாம் தன... போய் படி.. நல்லா பண்ணு.. நைட் பேசுவோம்... பைய் டா...

                   ம்ம் பாய் அண்ணா.. என்றபடி போனை கட் பண்ணிவிட்டு... எக்சாம்க்கு தயாராகி சத்யாவுடன் கல்லூரி நோக்கி சென்றாள் அகல்யா...

                    இருவரும் எக்சாம் முடித்து வருவதற்குள் அகல்யாவை பற்றி நாம் தெரிந்து கொள்ளுவோம்...

                  அகல்யா சொந்த ஊர் இராமேஸ்வரம்.... அம்மா அப்பா ஐந்தாம்  வயதிலேயே தவறியிருக்க.. அண்ணனின் அணைப்பில் வளர்ந்தவள்.... அண்ணன் அர்ஜுன் அவளுக்கு சகலமுமாக விளங்குபவன்... பத்து வயதே நிரம்பியிருந்த அர்ஜுன் அகல்யாவுக்கு தாயுமானவனாக திகழ்ந்தான்.... அப்போது இருந்து இப்போது வரை... அவளின் சிறு வயதில் இருந்தே நெருங்கின தோழி சத்யா... இருவரும் இராமேஷ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மதுரை கல்லூரியில் சேர்ந்து B.Sc (cs) முடித்துவிட்டு இப்போது அதே கல்லூரியில் M.Sc இறுதி ஆண்டு தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர்...

               இருவருக்கும் கல்லூரியில் உள்ள ஹாஸ்ட்டல் பிடிக்காததால்... வெளி ஹாஸ்ட்டலில் தங்கி தங்கள் படிப்பை தொடர்ந்தனர்...

              இன்றோடு அகல்யாவிற்கு தேர்வு முடிகிறது.... தன் சொந்த ஊருக்கு சென்று அண்ணனை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்தாள் அவள்...

              தோழர் தோழிகளோடு பிரியாவிடை பெற்று இருவரும் ரயில் நிலையம் நோக்கி சென்றனர்...

             ரயில் வந்ததும் ஏறி லேடீஸ் கம்பார்ட்மென்டிற்கு சென்று அங்கிருந்த ஜென்னல் இருக்கையில் அமர்ந்தாள் அகி... அருகில் சத்யா...

             அகிக்கு எப்போதும் ஜென்னல் அருகில் அமர்ந்து பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும்.... இயற்கையை ரசித்தபடி சந்தோஷமாக பயணம் மேற்கொள்ளுவாள்.... கல்லூரியில் இருந்து லீவிற்கு இராமேஷ்வரம் போகும் போது இருவரும் சந்தோஷமாக செல்வர்.. ஆனால் திரும்பி கல்லூரிக்கு வரும் போது அது காணாமல் போயிருக்கும்...

                 அகி.. நான் சொன்னத பத்தி அண்ணாட்ட கேட்டு முடிவு பண்ணயா???

                ம்ம் பண்ணலாம் சத்யா.. நான் கேட்டு சொல்றேன்...

               அதெல்லாம் எனக்கு தெரியாது டி.. நீ வர்ற அவ்ளோதான்... ப்ளீஸ் டி..

                சத்யாவிற்கும் அகிக்கும் மதுரையிலேயே வேலை கிடைத்திருந்தது.... அதற்கு தான் சத்யா அகியை கம்பெல் செய்கிறாள்.... ஆனால் அகிக்கோ இனிமேலும் தன் அண்ணன் மற்றும் சொந்த ஊரை விட்டு பிரிந்திருப்பதில் விருப்பம் இல்லை

               சத்யா புருஞ்சுக்கோ.. அண்ணா வேலை வேலை னு சாப்டவே மாட்றாங்கனு நினைக்கிறேன்... வர வர ரொம்ப ஒல்லி ஆகிட்டே போறாங்க... நான் பக்கத்துல இருந்தா சாப்ட வைக்கலாம்... அவங்களுக்கு இருக்குறது நான் மட்டும் தான்... இந்த ஐந்து வருஷம் என்ன ரொம்ப மிஸ் பண்ணிருப்பாங்க... இனிமேலும் அவங்கல நான் தவிக்க விட கூடாது டி..

              ம்ம் அதுவும் சரிதான்... அப்ப சரி டி.. நம்ம இராம்நாடுல எதும் வேலை தேடுவோம்.. நானும் நீ இல்லாம அந்த கம்பேனிக்கு போல என்று முடித்துவிட்டாள்...

             ம்ம் போலாம் டி.. என்று சத்யாவிடம் கூறிவிட்டு இயற்கையை ரசிக்க ஆரம்பித்தாள் அகி...

            அகல்யாவின் வாழ்க்கை பயணம் தொடரும்....

                 

           

             

அகல்யாWhere stories live. Discover now