மதிய உணவு முடித்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். அஸ்வந்த் ரோஷனின் போன் வர பால்கனியில் நின்று பேசிக்கொணடிருந்தான்.
''அஸ்வந்த் பிசினஸ் நல்லா போய்கிட்டிருக்கு.." என அவன் பிசினசை பற்றி தொடங்க இடைமறித்தான் மற்றவன்,
''ரோஷ் உனக்கு ஒண்ணு சொல்லணும்டா ஹனியை பற்றி உன்கிட்டே சொல்லி இருக்கேன் இல்லையா? சம்டைம் அவ பண்றது எனக்கு புரியமாட்டேங்குது" என அவன் அன்று தோப்பில் நடந்ததை கூறினான்.
''அவள் எனக்கு ஹெல்ப் பண்ண வந்தவள் தானே? எதுக்கு பீலீங் பண்ணி அழணும்? அவளோட பார்வைக்கும், பேச்சுக்கும் எனக்கு மீனிங் தெரியமாட்டேங்குதடா.. நீ என்ன திங்க் பண்றே?"
''அய்யோ இப்படிபட்டவனை கல்யாணம் பண்ணிகிட்ட அந்த பெண் பாவம்! தன் கணவனுக்கு எதுவும் நேர்ந்து விட்டதோ என அவ துடிதுடித்தது காதல்டா! அது தெரியலையா? மூச்சே நின்றுவிட்டது ! என்று சென்னாளே அதிலிருந்து உன்மேலே எவ்ளோ உயிராக இருக்குறாள் ? என்ற மீனிங் புரியலையாடா மடையா?" ரோஷன் தொண்டைக்குள் வந்த கேள்விகளை தொண்டைக்குள்ளேயே அடக்கினான்.
''ஹலோ ரோஷன் லைன்லே இருக்கியா?" நண்பனின் குரல் கேட்க,
''ம்...இப்போ உனக்கு இதுக்கு விளக்கம் சொன்னாலும் புரியாதுடா! காலந்தான் சொல்லணும் அது புரிய வைக்கும்"
''ஆத்தாடி நீ கூட குழப்புறே" அவன் சொல்ல மற்றவன் சிரித்தான்.
''பரவாயில்லையே தமிழ் நல்லா பேசுறே!"
''ம் ஹனி கூட இருந்தா எல்லாம் கத்துடலாம்" அவள் பேச்சு எடுத்தாலே அவனது குரலில் உற்சாகம் வடிந்தோடியது தெரிந்தது ரோஷனுக்கு,
''மவனே நெருங்கிட்டே நீ! அவ உன்னை மாத்திடுவா" அவன் மனதுக்குள் சொல்லியவாறு பிசினஷ் விசயத்துக்கு தாவினான்.
தேன்மொழி பால் எடுத்து வந்து டேபிளில் வைத்துவிட்டு கணவனை பார்த்தாள் அவன் இரவு நேர உடையில் செல்போனில் ஆழந்திருந்தான்.
''எப்பா பாரு அந்த செல்லை ஆராய்ச்சி பண்ணிகிட்டு.. அப்படி என்னதான் இருக்கோ அதில? கட்டிய மனைவி அருகில் இருக்க டெலிபோனை ஆராய்ச்சி பண்ற நேரமா இது?" முறைப்புடன் அவள் முணுமுணுத்தவாறு பாலை எடுத்து நீட்டினாள்.;
![](https://img.wattpad.com/cover/246316545-288-k68933.jpg)