என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா அத்தியாயம் 50

867 26 0
                                    

''அங்கிள்..இன்னிக்கு மட்டும் ஒரு நாப்பது தடவை எனக்கு போன் போட்டுவிட்டான் அஸ்வந்த்..அதில பத்து நான் அட்டெண்ட் பண்ணலை...இவன் வேகத்துக்கு யார் ஈடு கொடுப்பது..? தனியாகவே எல்லாம் போய் முடித்துவிட்டு வந்து ரோஷன் எனக்கு கம்பெனி பத்திரங்கள் சிலது பேக்ஸ் பண்ணிவிடு.. எம்பசிக்கு அனுப்பணும் ஒரு வீக்கில பாஸ் போர்ட் விசா எல்லாம் வந்துடும் என்று சொன்னபோது எனக்கு என்ன பேசுவது என்று தெரியலை அங்கிள்.. இவன் இவ்வளவு தீவீரமாக இருப்பான் என்று நினைக்கலை அங்கிள்.." ரோஷன் வேணுகோபாலுடன் பேசிக்கொண்டு இருந்தான்.

''ஆமாம்பா நாங்க எடுத்த முடிவை உனக்குதான் சொல்லியாச்சே அதனால விட்டுடு அவன் இஷ்டப்படி நடக்கட்டும்"

''தப்பு அங்கிள்..ஜீலி நடவடிக்கைகளை நான் வாட்ச் பண்ணி வைச்சிருக்கேன். அவ செல் நம்பர் கூட மாத்திகிட்டா.. அஸ்வந்த் வரட்டும் வந்தால் தான் அவனுக்கு புரியும். புரிய வைக்கிறேன்..அதற்கு அப்புறமும் முரண்டு புடிச்சா அவன் விதிப்படி நடக்கட்டும் என விட்டுவிடவேண்டியதுதான்''

''ரொம்ப நன்றிப்பா உன் போல பிள்ளை கூட அவனுக்கு பிரண்டசிப் இருக்கிறதை நினைச்சா ரொம்ப சந்தோசமாக இருக்கு... நாங்க போராடிப் பார்த்துட்டோம்.."

''நீங்க கவலைப்படாதீங்க! அங்கிள் நான் அவன் வழியிலேயே போய் அவனுக்கு புரியவைக்கிறேன்.. கடைசிவரை போரடிப்பார்ப்பது என்று முடிவு பண்ணிட்டேன்..நம்ம ரெண்டு பேருக்கும் காண்டாக்ட் இருக்கு என்று இதுவரை அவனுக்கு தெரியாது. அவனது நடவடிக்கைகளை நான் உங்களுக்கு அப்பப்போ தந்துட்டு இருப்பேன்..டோண்ட் வெறி.."

''ரொம்ப நன்றிப்பா! நீ அங்கு இருக்கே என்ற ஒரு நம்பிக்கையில தான் நாங்க அவனை துணிந்து போ என்று கட்டவிழ்த்து விடாத குறையாக விட்டிருக்கோம்.. அவன் எந்த தப்பான வழிக்கும் நுழைஞ்சிடக்கூடாது"

''நான் பார்த்துக்குறேன்..என் கூடவே தங்க வைச்சுடுறேன்..நீங்க கவலைப்படாதீங்க. நான் வைச்சுடுறேன் அஸ்வந்த் கால் வருது..."

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now