''நான்
வாங்கி வந்த
சாகா வரம்
காதல்!"அடுத்த சில நிமிடங்களில் மாளிகைக்கு முன்னாடி வந்து நின்றது கார்.
நிறுத்திவிட்டு இறங்கி குழந்தையை வாங்கியவன், தேன்மொழி இறங்க மீண்டும் அவளிடம் குழந்தையை கொஞ்சிவிட்டு கொடுத்தான்.
ரோஷன் இவனருகே வந்து லிஸ்டை காட்டி பேசத்தொடங்க, இருவரும் பேசியவாறு உள்ளே நுழைந்தனர்.
தேன்மொழி கணவன் என்ன பேசினான்? எங்கே கிளம்பபோகிறான்? என்ற கேள்வியோடு அவனை பார்க்க,
''உன்னோட பிரண்ட்ஸ் வந்திருக்காங்க. அவங்க தங்குறதுக்கு இஷ்டம் போல ரூமை எடுத்துக்க சொல்..பெண்கள் யாரும் எதற்கும் கூச்சப்படவேண்டாம். அவங்க வீடு போல இருந்துக்கலாம் என்று சொல்லு.." என்றுவிட்டு அவன் ரோஷனோடு வெளியே வந்தான்.
தேன்மொழியை கண்டதும் லலிதா, மீனா, சாந்தி, கல்பனா எல்லோரும் ஓடி வந்து பிடித்துக்கொண்டனர். அவளுக்கும் அவர்களை பார்த்ததும் சந்தோசம் எழுந்தது.
''அக்கா எல்லோரும் நல்லா இருக்கீங்களா?" அவள் ஆவல் பொங்க கேட்க,
''நாங்க நலமாக இருப்பது இருக்கட்டும். நீ இப்படி ஒரு ராயல் பேமிலி மருமகள் என்று சொல்லலை..மறைச்சு வைச்சு.. தங்க தொட்டிலில் தவழவேண்டிய பேரனை ஆசிரமத்தில் வளரவிட்டு, உனக்கு அடுக்குமா?" மீனா குறையுடன் கேட்க
''உன் கூட சேர்ந்து, குழந்தையின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்க பாத்தியே." கல்பனா தன்பங்குக்கு குறைபட்டாள்.
"உன் வீட்டுக்காரர் ரொம்பவும் ஸ்மார்ட்..எப்படித்தான் அவரை பிரிய துணிந்தாயோ?" சாந்தி கேட்க,
''நாங்க வந்த உடனேயே அவர் வரவேற்ற விதம் என்ன? ஆளாளுக்கு தனி அறை என்று சகல வசதிகளும் முன்னாடியே செய்திருப்பார் போல.. அதைவிட ஆயிரம் தடவை நன்றி சொல்லிவிட்டார். உன்னையும் குழந்தையையும் பாதுகாத்ததுக்கு. அது போதாது என்று ஆசிரமத்துக்கு ஒரு பிளாங்க செக்" லலிதா ஆச்சர்யமாக சொன்னாள்.
![](https://img.wattpad.com/cover/246316545-288-k68933.jpg)