என்னில் நீயடி..! - எஸ்.ஜோவிதா அத்தியாயம் 77

967 25 1
                                    

''ஒரு முனிவன்
எனக்கு சாபம் இட்டான்
ராட்சசன் ஒருவன்
உன்னை சிறை வைப்பான்
அதிலிருந்து
உன்னால்
மீளவே முடியாது என்று
நிஜந்தான்
உன் காதல்
சிறையிலிருந்து
இன்றுவரை என்னால்
தப்பி ஓடமுடியவில்லை"

''தேனு...குழந்தைக்கு என்ன பேரு வைச்சிருக்கே..? எத்தனை மாசம் ஆகுது?" கனகா தேன்மொழியின் குழந்தையை வருடியவாறு கேட்டாள்.

''அஸ்வத்..பேரு..நாலு மாசம் ஆகுது.."

''நாலு மாசமா? ஒரு வயசு போல இருக்கான்." பவளம் சொல்ல,

''அடியேய் எல்லோரும் கண்ணு வைக்காதீங்கடி! என் மாப்பிளை போல ரொம்ப உசரமா இருக்கான்டி என் கொள்ளுப்பேரன்".. சோலையம்மா சொல்லியவாறு வந்து சேர்ந்தார்.

''ஆமா..ஆமா..கை, கால், விரல் எல்லாம் அவரைப்போலவே நீட்டாத்தான் இருக்கு.." செண்கபவல்லி பிஞ்சு விரல்களில் கொஞ்சியவாறு சொன்னாள்.

''பேரு என்ன சொன்னே?" மேகலை புரியாமல் மறுபடியும் கேட்க,

''அஸ்வத்."

''சரிதான் அஸ்வத்-அஸ்வந்த் 'அஸ்' என்று நீ கூப்பிட யாரு 'ம் ' கொட்டுறது உன் புருசனா? இல்லை குழந்தையா?" பவளம் கிண்டலாக கேட்டாள்.

''நான் அவரை பேர் சொல்லி அழைப்பது குறைவு" தேன்மொழி மெல்லிய குரலில் சொல்ல,

''அதானே! தேனு சும்மா சொல்லக்கூடாதுடி உன் பையன் சுத்தமாக உன்னைப் போல இல்லை.." செண்பகவல்லி ஆராய்ச்சி செய்துவிட்டு தன் முடிவை சொன்னாள்.

''அவரைப்போலவே இருப்பதால் எனக்கு ரொம்ப சந்தோசமே.." என்றாள் அவள் மீண்டும் மெல்லிய குரலில்

''ஏய் பொண்ணுங்களா..இப்படி நடுவீதியில் நின்னு கதை பேசுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? உள்ள வாங்கடி" சோலையம்மா கூப்பிட பெண்கள் உள்ளே நுழைந்தார்கள்.

''செண்பகா உனக்கு என்னடி வந்தது? ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கே?" தேன்மொழி குழந்தையை கொஞ்சியவாறு இருந்த செண்பகத்திடம் கேட்க, அவள் வாய் திறக்காது போக, பவளம் திறந்தாள்.

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now