என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா அத்தியாயம் 19

1.1K 25 0
                                    

ஊரே வியக்கும் வண்ணம் கோயில் திருவிழா போல கல்யாண விழாவா? இல்லை தேவலோக திருவிழாவா என வியக்கும் அளவுக்கு மாளிகை காட்சியளித்தது. சுற்றி வர இருந்த ஊரில் ஏழைகள் விவசாயிகள்,தொழிலாளிகள் அனைவரும் அழைக்கப்பட்டு உடுக்க உடையிலிருந்து உணவு பணம் என்று ஒவ்வொருத்தருக்கும் பரிசாக கொடுக்கப்பட்டது.

ஏழைகள் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்பது போல அவர்கள் மனம் நிறைந்திருந்தது வயிறு நிறைந்தது. அஸ்வந்துக்கு மயக்கமே வரும் போல இருந்தது வந்திருந்த கூட்டத்தை பார்த்து

'இது என்ன பங்ஷன்? மியூஸிக் புரோகிராம் போல?" வாய்விட்டே கேட்டுவிட்டான்.

'தாத்தா இதுக்கு இப்படி ஒரு பங்ஷன்?"

'ம்..எங்ககிட்டே கொட்டிக்கிடக்குற பணத்தை காட்டவோ? இல்லை தரத்தை காட்டவோ? இல்லை! எதுவும்     ஆடம்பரம் இல்லைப்பா எதுவும் வீண் செலவு இல்லை! பந்தல் போடுறதிலே இருந்து பரிமாறும் வெற்றிலை பாக்கு வரை நம்ம தோட்டத்தில உருவானது. அத்தனையும் இலவசமாக பசி என்றால் என்னவென்று தெரியும் ஏழைகள் வயிற்றுக்குள் தான் போகுது. அவர்கள் மனம் குளிரணும் அப்போதுதான் நிலத்தில் நெல் விளையும். அந்த குளிர்ந்த மனசோடு உன்னை வாழ்த்தினால் உன்னோட வாழ்க்கையில சந்தோசம் பொழியும். என் மக்கள், என் விருப்பம் விட்டுடு." அவர் சொல்லிவிட்டு போக அஸ்வந்துக்கு பேச்சு எழவில்லை.

'சாதாரண பரிகாரத்துக்கான பங்கசனுக்கே இப்படியா?" சர்ச்சில் வெறும் மோதிரம் மாற்றி கல்யாணத்தை முடித்துக்குகொள்ளும் சடங்கை பார்த்து பழகியனுக்கு இந்தியாவின் கலாச்சாரம் அதன் பண்பாடு ஒவ்வொன்றையும் செயல்படுத்தும் விதம் எல்லாம் அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. தேவகியும் வளளியம்மையும் ஐயர்
என்னவெல்லாம் சொல்வார் , அதற்கு அஸ்வந்த் திண்டாடிக்கூடாது என்பதற்காக மணவறையில் அவனுக்கு அருகேயே நின்றிருந்தனர். அதை விட காலையில் அவன் உடை உடுத்தி தயார் ஆனதும் இரு பெண்களும் அவனை தனியே அழைத்து,

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாOù les histoires vivent. Découvrez maintenant