என்னில் நீயடி.. எஸ்.ஜோவிதா அத்தியாயம் 29

1K 26 0
                                    

அஸ்வந்துக்கு உற்சாகமாக இருந்தது. தேன்மொழி ஒவ்வொரு மாலையும் அஸ்வந்துக்கு தமிழ் கற்றுக்கொடுத்தாள்.  அவன் அவளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தான். தமிழ் பேசுவது புரிந்தாலும் தானும் சரளமாக பேச வேண்டும் என்ற ஆசை பிறந்தது. இது எல்லாவற்றையும் விட அவனுக்கு தேன்மொழி கூட இருப்பது மிகவும் பிடித்திருந்தது.

வெளியில் எங்காவது போகலாம் என தீர்மானித்தவனாக தேன்மொழியை தேடிப்பேனான். தோட்டத்தில் ஒரே சச்சரவாக இருந்தது.

''தேனும்மா..தொடாதே! கையில் கொத்திட போகுது..." வீரய்யனும் தோட்டக்கார பாலுவும் சொல்லிக்கொண்டிருந்தனர்

''கொத்தினா கொத்திட்டு போகட்டும்!" அவள் முறைப்புடன் பதிலளித்துவிட்டு தொடர்ந்தாள்.

''உங்க கால்லே இப்படி அடித்து முறித்து போட்டால் எப்படி இருக்கும்? வாயுள்ள ஜீவனா இருந்தா என்ன?    வாயில்லாததா இருந்தா என்ன? வலி வலி தான் ! நம்மால வாய்விட்டு சொல்ல முடியும். இதுவால சொல்ல முடிஞ்சிருந்தா அய்யோ கல்லு எறியாதீங்க! நான் பறந்து போயிடுறேன் என்று சொல்லிட்டு தப்பி ஓடியிருக்கும்." அவள் கோபமாக திட்டிக்கொண்டிருக்க பெரியவர்கள் தோட்டத்தின் அடுத்த பகுதியில் அமர்ந்திருந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தனர் அஸ்வந்த் வந்து ,

''என்ன பிராபளம்?" என கண்களால் கேட்க அவர்களும் ''போய்ப் பார்'' என்று கண்களால் பதிலளித்தனர். விரைந்து சென்றான்.

தேன்மொழி நடக்க முடியாமல் சாய்ந்து படுத்திருந்த பஞ்ச வர்ணக்கிளியை தனது மடியில் படுத்தி சேலைத்தலைப்பை கிழித்து கட்டுப்போட்டுக்கொண்டிருந்தாள்.

பழுத்த கொய்யா பழத்தை ஒரு நாளும் உருப்படியாக பறிக்க விடாத பறவைகள் மீது ஆத்திரமாக இருந்த தோட்டக்காரன் தன்னை மறந்து ருசித்துக்கொண்டிருந்த பஞ்ச வர்ணக்கிளிகளை அடித்ததும் , ஒரு கிளி அடிபட்டு கத்திக்கொண்டு தேன்மொழி பூப்பறிக்க வரும்போது அவளது தோளில் விழ அவள் துடிதுடித்து போனாள். அதன் பிரதிபலன் தான் தோட்டக்காரனை வாங்கு வாங்கு என்று வாங்கிக்   கொண்டிருந்தாள்.

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ