என்னில் நீயடி..! - எஸ்.ஜோவிதா அத்தியாயம் 74

939 21 0
                                    

அஸ்வந்த் படிகளில் இறங்கி வந்தான். எதிர்கொண்ட வேணுகோபால்,

''அஸ்வந்த் வெளியே போயிட்டு வந்ததும் தேன்மொழி அவ பாட்டியை பார்க்கணும் என்று சொல்றா அழைச்சுட்டு போப்பா! குழந்தையை அவங்களும் பார்க்கட்டும். பாவம் அவங்களும் எப்படி தவிச்சுப்போயிருப்பாங்க" சொல்ல,

''ம்.சரி டாட்..குழந்தை பசியாறட்டும்.. அழைச்சுட்டு போயிடுறேன்..சளி பிடிச்சிருக்குன்னு சொன்னா இப்போ காணலை.."

''ஆமா உன்னை கண்டதும் ஜலதோசமும் ஓடிடுத்து" ரோஷன் சிரித்தவாறு சொன்னான்.

''என்னைக்கண்டா எல்லாம் தான் ஓடுது என்ன பண்ண?" அவன் கிண்டலாக பின்னால் வந்து நின்றிருந்த மனைவியை பார்த்து சொல்ல அவள் முகம் திருப்பினாள்.

''பேரா ஜோசியர் வந்துடுவார், நீங்க இந்நேரம் போகணுமா?" பரமசிவம்

''ஏன் தாத்தா ஜோசியர் எனக்கு பொண்ணு பார்க்க போறாரா? இல்லை கல்யாணதேதி குறிக்கபோறாரா?"

''அட இதபாரடா இந்த பயலுக்கு ஆசைதான்.. நீங்க கிளம்புங்க. நீ இருந்தா ஜோசியரை கிண்டலடித்தே ஓட வைச்சுடுவே.".

''அந்த பயம் இருக்கட்டும். ரோஷ் கிளம்பலாமா?"

''நான் ரெடிடா.." அவன் குரல் வெளியே இருந்து வர அஸ்வந்த் ஜீப்பில் ஏறிக்கொண்டான். அவர்கள் சென்று பத்துநிமிடத்தில் ஜோசியர் வந்தார்.

குடும்பமே ஒன்று கூடி இருந்தது. நலன் விசாரிப்புகளுக்கு பிறகு, பரமிசிவம் பூஜைக்கு ஏற்ற நாளை குறித்து தர சொல்லி கேட்டுக்கொண்டார். அவர் குறித்துக்கொடுத்ததும்,

''ஜோசியரே கையோடு எங்க கொள்ளுப்பேரன் பொறந்த தேதி, நேரம் எல்லாம் இதில இருக்கு அவனுக்கு ஒரு ஜாதகம் எழுதிடணும்.."

''எழுதிட்டாப்போச்சு! குழந்தை சாட்சாத் அவங்க அப்பா போலவே இருக்கானே...நீங்க கொடுத்து வைச்சவங்க.. குடும்ப சகிதமாக பல்லாண்டு வாழணும்.. இந்த சந்தோசம் என்றைக்கும் இருக்கட்டும்" அவர் வாழ்த்த,

''ரொம்ப நன்றி, இது எங்க பேரனோட பேத்தியோட ஜாதகம்..இனி ரெண்டு பேருக்கும் தோசம் எதுவும் இல்லை தானே? ஒருதடவை பார்த்து சொல்லுங்க!" என வள்ளியம்மை
ஜாதகங்களை நீட்ட, அவர் வாங்கிப்பார்த்துவிட்டு,

என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now