''ஹனி! வெளியே வந்தா ஏகப்பட்ட இன்ரஸ்டிங்கான மேட்டர் இருக்கும் போல' அதுவரை பேசாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த தேன்மொழி அருகில் வந்து நின்று தேன்மொழிக்கு பிரமிப்பு நீங்காமல் அவனது கைகளை எடுத்து குலுக்கியவளாக,
''யூ ஆர் கிரேட்டுங்க.." என்றாள்.
''தேங்ஸ் பட். நீ விஷ் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் ஈபிள் டவரிலிருந்து பறக்கலை ஹனி.."
''பட்...என் மனசிலே எங்கேயோ போயிட்டீங்க.." என்று மெல்லிதாக முனகினாள்.
''ஹே..என்ன சவுண்ட் இல்லை காத்துதான் வருது.." அவள் உதட்டசைவை பார்த்து அவன் கேட்க, நிமிர்ந்து பார்த்தவளின் செவ்விதழை குனிந்து முத்தமிட வேண்டும் என்று எழுந்த ஆவலை கட்டுப்படுத்தியவனாக அவளை பார்த்தான். கணவனது பார்வையில் இருந்து அவன் நோக்கம் கண்டவள்,
''ஒண்ணுமில்லை அடுத்த விசிட் எங்கே?" என்றாள் பேச்சை மாற்றும் விதமாக,
''ம்..கொஞ்சும் வாக் பண்ணலாம" என அவன் நடக்க, அவளும் நடந்தாள்.
''ஏங்க நீங்க பேசினதை பார்த்தா ஃபாரின்லே முதியோர் இல்லம் அப்படி ஒன்று இருக்கா?"
''இருக்கு பட்..அங்கே எல்லோரும் ரொம்ப ஹாப்பியா இருப்பாங்க..சம் கவர்ன்மெண்ட் எல்லா ஹெல்ப்பையும் செய்து கொடுக்கும்..சம் பாரின்ல எவ்ரி மன்ந்த் பணம் வேறு கொடுப்பாங்க.. பிள்ளைங்க அப்பப்போ வந்து பார்த்துட்டு போவாங்க. பிள்ளைங்க எல்லோரும் மேஜர் ஆனாதுக்கு அப்புறம் ஒவ்வொருத்தரும் தனித்தனி அப்பார்ட்மெண்ட், இல்லேன்னா பிரணட்சுங்க கூட சேர்ந்து தனியா இருக்க போயிடுவாங்க.. சோ பேரணட்ஸ். தனிச்சுடுவாங்க... அதுக்கு அப்புறம் ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப்பா இருப்பாங்க..."
''ஓ மேஜர் வயசு வந்தா பேரண்ட்சு கூட இருக்க கூடாதா?"
''அப்படி இல்லை..மேஜர் ஆனதும் அவங்க , அவங்க லைவ்வை பாத்துக்கணும் என்கிற ப்ரீடம் இருக்கு.. தென்.. லிவிங் டூகெதர் லைவ் அங்கு."